Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திங்கள்கிழமை காலையில்.. சிட்னி சாலையில்.. கார் முன் பாய்ந்த ஆஸி. நீ்ச்சல் வீரர் தோர்ப்!

சிட்னி: பிரபலமான ஆஸ்திரேலிய நீச்சல் வீரர் இயான் தோர்ப் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு ரோட்டில் தன் நினைவின்றி நடந்து கார் முன்பு பாய்ந்து மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மன நல ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தோர்ப் சர்வதேச போட்டிகளில் குறிப்பாக ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் உள்ளிட்டவற்றை வென்ற ஜாம்பவான் ஆவார்.

ஒலிம்பிக்கில் ஐந்து முறை தங்கம்

ஒலிம்பிக்கில் ஐந்து முறை தங்கம்

தோர்ப் ஒலிம்பிக் போட்டிகளில் ஐந்து முறை தங்கப் பதக்கம் வென்ற சாம்பியன் ஆவார். 2000 மாவது ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கமும், 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 2 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கமும் வென்றார்.

உலக நீ்ச்சல் சாம்பியன்

உலக நீ்ச்சல் சாம்பியன்

மேலும், 1998ல் நடந்த உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 தங்கம், 2001ல் நடந்த போட்டியில் 6 தங்கம், 2003ல் நடந்த போட்டியில் 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கள் என வாங்கிக் குவித்தவர்.

காமன்வெல்த்தில் 10 தங்கம்

காமன்வெல்த்தில் 10 தங்கம்

அதைத் தவிர காமன்வெ்ல்த் போட்டியில் 10 தங்கப் பதக்கம் வென்ற சாதனை வீரர் தோர்ப்.

திங்கள்கிழமை காலையில்.. சிட்னி சாலையில்...

திங்கள்கிழமை காலையில்.. சிட்னி சாலையில்...

இப்படிப்பட்ட தோர்ப், திங்கள்கிழமை காலையில், சிட்னி சாலையில், அவர் தன் நினைவில்லாமல் அவர் பாட்டுக்கு நடந்து வந்தார். பின்னர் திடீரென ஒரு கார் முன்பு பாயப் பார்த்தார். காரை ஓட்டி வந்தவர் சுதாரித்து நிறுத்தி விட்டார். அப்போது தோர்ப் மயங்கிக் கீழே விழுந்தார்.

மன அழுத்த பாதிப்பு

மன அழுத்த பாதிப்பு

விரைந்து வந்த போலீஸார் விழுந்த நபர் யார் என்பது குறித்து விசாரித்துப் பார்த்தனர். அருகில் இருந்த யாருக்கும் தெரியவில்லை. பின்னர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்குதான் அவர் தோர்ப் என்பது தெரிய வந்தது. மன அழுத்தத்தால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பெயின் கில்லர்கள்

பெயின் கில்லர்கள்

தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வந்தார் தோர்ப். மேலும் அவருக்கு மன அழுத்தமும் இருந்து வந்தது. இதற்காக பெயின் கில்லர்கள் மற்றும் மன அழுத்த மாத்திரைகளை அவர் உண்டு வந்தார். அவற்றால் ஏற்பட்ட பாதிப்பால்தான் இப்படி ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மன அழுத்தமே காரணம்

மன அழுத்தமே காரணம்

ஆனால் தோர்ப்புக்கு மன அழுத்த பாதிப்பே முதன்மையாக இருப்பதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார். அதற்காக தற்போது அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் உதவியாளர் எர்ஸ்கைன் தெரிவித்துள்ளார்.

டோப் அடித்ததுண்டு.. ஆனால் மது கிடையாது

டோப் அடித்ததுண்டு.. ஆனால் மது கிடையாது

முன்பு போதைப் பொருள் உட்கொண்டு வந்தார் தோர்ப். பின்னர் அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் மதுப் பழக்கம் அவருக்கு தற்போது கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்றும் அவர் மது அருந்தியிருக்கவில்லையாம்.

Story first published: Tuesday, February 4, 2014, 11:37 [IST]
Other articles published on Feb 4, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+