Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காதல் வாசம்.. காதல் வாசம்.. ஜெஸ் ஹோலியாக்குடன் ஹேப்பி.. முதல் திருமண நாளை கொண்டாடிய மேகான்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளரான மேகான் ஷூட், தனது காதல் மனைவியுடன் முதலாவது திருமண நாளை ஜாலியாக கொண்டாடியுள்ளார்.

நீண்ட காலமாக இருவரும் காதலித்து கடந்த வருடம் மார்ச் 31ம் தேதி முறைப்படி திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவர். இவர்களது திருமணம் அப்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

உலகின் மிகச் சிறந்த வேகப் பந்து வீச்சாளர்களில் மேகானும் ஒருவர். மேலும் ஐசிசி மகளிர் டி20 ரேங்கிங்கிலும் முதலிடத்தில் இருப்பவர். 27 வயதான மேகான் ஆஸ்திரேலியாவின் முக்கியமான பந்து வீச்சு வீராங்கனை ஆவார்.

ஓரினச்சேர்க்கை தம்பதி

ஓரினச்சேர்க்கை தம்பதி

கடந்த 2018ம் ஆண்டு ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து முறைப்படி தம்பதிகளாக வாழலாம் என ஆஸ்திரேலிய அரசு சட்டம் இயற்றியது. இதையடுத்து நீண்ட காலமாக தான் காதலித்து வந்த ஜேஸ் ஹோலியாக்கை மணந்து கொண்டார் மேகான். இது ஆஸ்திரேலிய விளையாட்டு உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. இருப்பினும் அதை மேகானும், ஜெஸ்ஸும் பொருட்படுத்தவில்லை.

2013 உலக கோப்பை சாம்பியன்

2013 உலக கோப்பை சாம்பியன்

மேகான் ஷூட், கடந்த 2013ம் ஆண்டு ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு உதவியவர். அப்போது அவர் 15 விக்கெட்களைச் சாய்த்து கலக்கியிருந்தார். அதேபோல 2018ல் இந்தியாவுடனான மகளிர் முத்தரப்பு தொடரில் ஹாட்ரிக் எடுத்தார். மகளிர் டி20 போட்டிகளில் ஹாட்ரிக் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையும் இதனால் இவருக்குக் கிடைத்தது.

இன்று முதல் திருமண நாள்

இன்று முதல் திருமண நாள்

இந்த நிலையில் இன்று தங்களது முதல் திருமண நாளை படு ஹேப்பியாக கொண்டாடியுள்ளனர் மேகானும், ஜெஸ்ஸும். இதுதொடர்பாக ஒரு டிவீட் போட்டுள்ளார் மேகான். அதில், இரு இதயங்களின் முதலாமாண்டு கொண்டாட்டம்.. தனிமையில்.. என்னிடம் உனக்கு அள்ளித் தர அன்பைத் தவிர வேறு ஒன்றுமில்லை.. எனது வாழ்க்கையின் மகத்தான ஆண்டு இது.. இதை முத்தத்துடன் கொண்டாடுகிறேன் என்று காதல் மழை பொழிந்துள்ளார்.

இருவருக்கும் காதல் மழை

இது கடந்த ஆண்டு திருமணத்திற்குப் பிறகு மேகான் போட்ட ட்வீட். அதிலும் காதல் மழைதான். அதில் மேகான் கூறுகையில், எனது வாழ்க்கையின் சிறந்த நாள் இது. எனது இதயம் நிரம்பி வழிகிறது. நான் மிகவும் அதிர்ஷ்டக்கார பெண். இன்று முதல் மிஸஸ் அன்ட் மிஸஸ் ஷூட் என்று தனது காதலை கொட்டியிருந்தார் மேகான் ஷூட். இந்த தம்பதிக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து கொண்டுள்ளன. நாமும் வாழ்த்துவோம்.

Story first published: Tuesday, March 31, 2020, 14:27 [IST]
Other articles published on Mar 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+