Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய மண்ணை இறக்குமதி செய்து பிட்ச் அமைக்கிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

பிரிஸ்பேன்: ஆசிய நாடுகளின் ஆடுகளம் போலவே பிட்ச் தயாரித்து அதில் தங்கள் நாட்டு வீரர்களுக்கு பயிற்சியளிக்க முடிவு செய்துள்ள ஆஸ்திரேலியா, இதற்காக இந்தியாவில் இருந்து மண்ணை அள்ளிச் செல்ல உள்ளது. ஆசிய நாடுகளில் விளையாடும்போது, ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களால் சுழல்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடிவதில்லை என்பதால், இம்முடிவுக்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் வந்துள்ளது.

ஆசியாவில் தொடர் தோல்வி

ஆசியாவில் தொடர் தோல்வி

கடந்த 2006ம் ஆண்டு வங்கதேசத்துடனான டெஸ்ட் போட்டிகளில் ஆடியது முதல் இதுவரை ஆசியாவில் ஆஸ்திரேலியா 13 டெஸ்ட் பந்தையங்களில் விளையாடியுள்ளது. ஆனால் ஒரு போட்டியில் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு காரணம், ஆசிய நாடுகளின் பிட்சுகள் ஸ்பின் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளதுதான் என்று கூறப்படுகிறது.

இந்தியாவுடன் மோசமான தோல்வி

இந்தியாவுடன் மோசமான தோல்வி

கடந்தாண்டு இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் 4க்கு பூஜ்யம் என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்ததும் அந்த அணி நிர்வாகத்தை கடுமையான சிந்தனைக்குள்ளாக்கியுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக பயிற்சி

பாகிஸ்தானுக்கு எதிராக பயிற்சி

இந்தாண்டின் இறுதியில் ஐக்கிய அரசு எமிரேட்டில் பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டித்தொடரில் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது. அதற்கு முன்பாக, தங்கள் வீரர்களை ஸ்பின்னுக்கு சாதகமான பிட்சில் விளையாட செய்து, பயிற்சி அளிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

ஆசிய மாதிரி ஆடுகளம் அமைக்க முடிவு

ஆசிய மாதிரி ஆடுகளம் அமைக்க முடிவு

ஆஸ்திரேலியாவின் தேசிய கிரிக்கெட் மையத்தில் ஸ்பின் பந்துக்கு சாதகமான பிட்ச் அமைக்கும் பணி தொடங்க உள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் கூறுகையில், இந்தாண்டில் ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளோம். தாய்நாட்டுக்கு வெளியே சமீபகாலமாக பெரிய வெற்றியை ஆஸ்திரேலியா பெறவில்லை என்பதை கவனித்தில் வைத்து ஸ்பின் பிட்சில் ஆட பயிற்சி எடுக்க உள்ளோம் என்றார்.

சுழற்றி எறிவதை தடுக்க கஷ்டம்

சுழற்றி எறிவதை தடுக்க கஷ்டம்

கிளார்க் மேலும் கூறுகையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. ஐக்கிய அரபு எமிரேட்டிலும் இந்தியா போன்றே பிட்சுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். ஆசிய அணிகளில் சுமார் 3 ஸ்பின் பந்து வீச்சாளர்களாவது இருப்பதால் அவர்களை எதிர்கொள்ள சிரமமாக உள்ளது. சிறந்த டெஸ்ட் அணியாக ஆஸ்திரேலியாவை உருவாக்க ஸ்பின் பிட்சுகளில் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம்.

சில வீரர்கள் பரவாயில்லை

சில வீரர்கள் பரவாயில்லை

சில வீரர்கள் ஸ்பின் பந்துக்கு ஏற்றவாறு ஃபுட்வெர்க் சிறப்பாக செய்து ஆடுகிறார்கள், ஆனால் பெரும்பான்மையான பேட்ஸ்மேன்களால் அதை செய்ய முடிவதில்லை. எனவே ஆசிய வகை பிட்சுகளில் ஆடி பயிற்சி எடுப்பது ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல வருங்காலத்தை அளிக்கும் என்று மைக்கேல் கிளார்க் கூறினார்.

இந்திய மண்ணுக்கு டிமாண்ட்

இந்திய மண்ணுக்கு டிமாண்ட்

ஆசிய நாடுகளின் பிட்சுகளை போன்ற ஆடுகளங்களை உருவாக்குவதற்காக இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம், மணலை இறக்குமதி செய்ய உள்ளது. இந்திய மண் இலங்கை. பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அனைத்து ஆசிய நாடுகளின் மண்ணுடன் ஒத்துப்போவதாக ஆஸ்திரேலியா கருதுகிறது.

Story first published: Thursday, June 5, 2014, 12:34 [IST]
Other articles published on Jun 5, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+