அஸார் மீதான தடை நீங்குகிறது?
மும்பை:சூதாட்டப் புகாரில் சிக்கிய, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்முகம்மது அஸாருதீன் மீதான வாழ்நாள் தடையை நீக்குவது குறித்து இந்திய கிரிக்கெட்வாரியம் ஆய்வு செய்து வருகிறது.இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக ஜக்மோகன் டால்மியா இருந்தபோது,சூதாட்டப் புகாரில் சிக்கி கிரிக்கெட் வாரியத்தால் வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட்விளையாட தடை விதிக்கப்பட்டார் அஸாருதீன்.
இதைத் தொடர்ந்து கிரிக்கெட் வாரியம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு அஸாருதீன்அழைக்கப்படுவதில்லை. அவரும் கிரிக்கெட்டை சுத்தமாக மறந்து விட்டார். இந்தநிலையில் அடுத்த மாதம் 4ம் தேதி முன்னாள் கேப்டன்களுக்குகிரிக்கெட் வாரியம் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதில் கலந்து கொள்ளுமாறும், அடுத்த நாள் நடைபெறும் சாம்பியன் கோப்பைபரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறும் கூறி இந்திய கிரிக்கெட் வாரியம்அஸாருக்கு அழைப்பு அனுப்பியுள்ளது.
இதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட ஒருவரை அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் பங்கேற்பஅழைப்பதா என இந்திய கிரிக்கெட் வாரியத்தை ஐ.சி.சி. கடுமையாக எச்சரித்துள்ளது.
ஆனால் இந்த எச்சரிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் நிராகரித்து விட்டது.இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கிரிக்கெட் வாரிய தலைவர் சரத் பவார்,
அஸார் மீதான குற்றச்சாட்டுக்களை சிபிஐ நிரூபிக்கவில்லை. அவர் மீது புகார்கள்இருந்தாலும் கூட அவரது சாதனையை, இந்திய கிரிக்கெட் அணிக்கு அவர் அளித்தபங்கை மறந்து விட முடியாது.
அஸாரை கெளரவிப்பது நமது கடமை. எனவேதான் அவரை அழைத்தோம். அஸார்மீதான ஆயுள் கால தடையை நீக்குவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் யோசித்துவருகிறது என்றார் பவார்.
வாழ்நாள் தடையை நீக்குவதாக இருந்தால் அதற்கு ஐசிசி அனுமதியைப் பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:49 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications