ரியோ ஒலிம்பிக் மல்யுத்தம்... இந்திய வீராங்கனை பபிதா குமாரி தோல்வி !
ரியோ: ரியோ ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை பபிதா குமாரி தோல்வியடைந்தார். 53 கிலோ எடைப் பிரிவில் கிரீஸ் வீராங்கனை மரியாவிடம் 5-1 என தோல்வியைத் தழுவினார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 31 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று மகளிருக்கான 53 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டிகள் நடைபெற்றன.

இதில் முதல் சுற்றில் இந்தியாவின் பபிதா குமாரியும் கிரீசின் மரியாவும் மோதினர். இந்த போட்டியில் பபிதா குமாரி 5-1 என தோல்வியடைந்தார். இதன் மூலம் போட்டியில் இருந்து வெளியேறினார்.
Story first published: Thursday, August 18, 2016, 20:03 [IST]
Other articles published on Aug 18, 2016


Click it and Unblock the Notifications