Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த பரணிகா.. போல் வால்ட் விளையாட்டில் முதல் ஆசிய விளையாட்டு பதக்கம்

நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த போல் வால்ட் (Pole Vault) வீராங்கனை பரணிகா இளங்கோவன் வெண்கலப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். பெண்களுக்கான போல் வால்ட் பிரிவில், ஆசிய விளையாட்டு வரலாற்றிலேயே பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்து இருக்கிறார்.

நகோயா மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில், பரணிகா 4.15 மீட்டர் உயரத்தை வெற்றிகரமாகத் தாண்டி 3-வது இடத்தைப் பிடித்தார். கஜகஸ்தான் வீராங்கனை போலினா இவானோவாவும் இதே 4.15 மீட்டர் உயரத்தைத் தாண்டினார். இருவரும் சம புள்ளிகள் பெற்றதால், வெண்கலப் பதக்கம் இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

Baranica Elangovan From Tamil Nadu Wins Historic Pole Vault Bronze for India at Asian Games 2026


29 வயதான பரணிகா இளங்கோவன், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை இளங்கோவன் ஒரு விவசாயி, தாய் ராணி இல்லத்தரசி. பள்ளிப் பருவத்தில் நீளம் தாண்டுதல் மற்றும் ஓட்டப்பந்தயங்களில் ஆர்வம் காட்டிய இவர், பின்னர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் பட்டம் படிக்கும் போது போல் வால்ட் பிரிவுக்கு மாறினார்.

சென்னையிலும் ஒடிசாவிலும் உள்ள உயர் செயல்திறன் மையத்தில் தீவிரப் பயிற்சி பெற்ற பரணிகா, நடப்பு 2026-ம் ஆண்டில் 4.22 மீட்டர் மற்றும் 4.23 மீட்டர் உயரம் தாண்டி இருமுறை அடுத்தடுத்து புதிய தேசிய சாதனைகளைப் படைத்து அசத்தினார்.

ஆசிய விளையாட்டில் 10,000 மீ ஓட்டத்தில் 2 பதக்கம் வென்ற ஒரே இந்தியர்.. குல்வீர் வெள்ளி வென்று சாதனை

கடந்த 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட பரணிகா, மனம் தளராமல் கடினமாக உழைத்து தற்போது வரலாறு படைத்து வெண்கலப் பதக்கத்தை வென்று இருக்கிறார். தமிழ்நாட்டு கிராமத்துப் பின்னணியில் இருந்து வந்து சர்வதேச தடகள அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்திய பரணிகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Story first published: Friday, September 25, 2026, 18:04 [IST]
Other articles published on Sep 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+