Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேட்டி எடுத்தபோது டென்னிஸ் வீராங்கனையைக் கட்டிப்பிடித்த நிருபர்

லண்டன்: பிபிசி நிறுவன செய்தியாளர் மைக் புஷல், பேட்டி எடுத்தபோது டென்னிஸ் வீராங்கனை மரியான் பர்டோலியை கட்டிப்பிடித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் தனது செயல் சரியானதே என்று விளக்கியுள்ளார் மைக்.

மைக் இதுபோல கட்டிப்பிடிப்பது இது முதல் முறையல்ல. யாரைப் பார்த்தாலும், யாரிடம் பேசினாலும் இதுபோலத்தான் செய்வாராம் அவர். இதையே அவரும் விளக்கமாக கூறி நியாயப்படுத்தியுள்ளார்.

விம்பிள்டன் டென்னிஸ் நேற்றுடன் முடிந்த நிலையில் அவர் வீராங்கனை மரியான் பர்டோலியை கட்டிப்பிடித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் கட்டிப்பிடித்த முடித்த பின்னர் பர்டோலியிடமே தனது செயலுக்கு அவர் நியாயம் கற்பித்துப் பேசினார்.

நான் பார்த்ததிலே...

நான் பார்த்ததிலே...

அவர் மரியானிடம் கூறுகையில், 'நான் கட்டிப்பிடித்ததிலேயே நல்ல கெஸ்ட் நீங்கள்தான். எனக்கு இது புதிதல்ல. இதில் தவறு இருப்பதாகவும் நான் உணரவில்லை.

நான் ஒரு நல்ல கட்டிப்பிடி நபர்...

நான் ஒரு நல்ல கட்டிப்பிடி நபர்...

நான் உண்மையில் ஒரு நல்ல கட்டிப்பிடி மனிதர். நிறைய கட்டிப்பிடிக்கிறேன் என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் இதை தவறாக செய்யவில்லை.

இதெல்லாம் கடமையா.. பெருமை

இதெல்லாம் கடமையா.. பெருமை

உங்களைக் கட்டிப்பிடித்ததை பெருமையாக கருதுகிறேன். நீங்கள் ஒரு நல்லகெஸ்ட்' என்று பேசிக் கொண்டே போனார் மைக்.

ஹிஹிஹி.. என்னத்தச் சொல்ல

அவர் பேசிக் கொண்டே போகப் போக எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் குழம்பியபடி சிரிப்பைச் சிந்தியபடி நின்றிருந்தார் பர்டோலி.

Story first published: Monday, July 13, 2015, 8:36 [IST]
Other articles published on Jul 13, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+