கிரீமி லேயர்- அரசே முடிவு செய்யும்: மொய்லி
டெல்லி:
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டைஅமல்படுத்துவது தொடர்பாக வீரப்ப மொய்லி தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை பிரதமர்மன்மோகன் சிங்கிடம் சமர்பித்துள்ளது.
அரசின் இடஒதுக்கீடு கொள்கையை ஒவ்வொரு 5 மற்றும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்யவேண்டும்.
மேலும் 3 புதிய ஐஐஎம்களை (இந்திய மேலாண்மை கல்வி நிலையங்கள்) ஏற்படுத்த வேண்டும்.
இட ஒதுக்கீட்டில் அதிக வருவாய் உள்ள பிரிவினரை (கிரீமி லேயர்) சேர்ப்பதா? நீக்குவதா என்ற சர்ச்சைஏற்பட்டு உள்ளதால், அது அரசின் முடிவுக்கே விடப்படுகிறது.
இட ஒதுக்கீடு கொள்கையை அமலாக்குவதற்கு வசதியாக, கல்வி நிலையங்களில் இடங்களை அதிகரிக்கவும்,புதிய ஆசிரியர்களை நியமிக்கவும், கல்வி நிலையங்களை விரிவாக்கவும் ரூ.17,200 கோடி நிதி செலவாகும்.
பொதுப் பிரிவுக்கான இடம் குறைக்கப்படாமல் 27 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக கல்விநிறுவனங்களில் தற்போதுள்ள இடங்களில் 54% அதிகரிக்கப்பட வேண்டும். ஆண்டுக்கு 18% வீதம் 3ஆண்டுகளில் இட ஒதுக்கீட்டை அமலாக்கலாம்.
2007-2008ம் ஆண்டு தொடங்கி 3 ஆண்டுகளில் 27 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக அமலாக்கப்படவேண்டும்.
ஆமதாபாத் மற்றும் இந்தூரில் உள்ள ஐஐஎம் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமலாக்க 4 ஆண்டு அவகாசம்வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தது ஏற்கப்படவில்லை. எல்லா கல்வி நிறுவனங்களும் 3 ஆண்டுகளில் அதைஅமல்படுத்த வேண்டும் என்று இந்தக் குழு முடிவு செய்துள்ளது.
மாணவர்களுக்கு கூடுதலாக கல்வி உதவிக் தொகை மற்றும் ஆராய்ச்சிக்கான ஊக்கத் தொகையை கொடுத்துஅவர்களை முன்னேற்றம் அடையச் செய்யலாம்.
உயர் கல்விக்கு அதிக தேவை இருப்பதால் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களை பிற இடங்களிலும்அமைக்கலாம்.
இவ்வாறு மொய்லி தலைமையிலான மேற்பார்வைக் குழு சமர்பித்துள்ள இறுதி அறிக்கையில் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:49 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications