For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"8758" எண் ஜெர்ஸி.. "சூப்பர்" பரிசு - "தங்கமகன்" நீரஜ் சோப்ராவை கொண்டாடும் சிஎஸ்கே, பிசிசிஐ

ஜப்பான்: ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிசிசிஐ மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகங்கள் பரிசுத் தொகையை அறிவித்துள்ளன.

Recommended Video

Neeraj Chopra Returns! Grand welcome for gold-medalist | OneIndia Tamil

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஈட்டி எறிதலின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மொத்தம் 12 வீரர்கள் கலந்து கொண்டனர்.

மொத்தம் 12 வீரர்கள் பங்கேற்ற இறுதிச்சுற்று, 6 சுற்றுகளாக நடத்தப்பட்டது. அதாவது மொத்தம் 6 வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன.

 மொத்தம் 7 மெடல்கள்

மொத்தம் 7 மெடல்கள்

தனது முதல் சுற்றில் 87. 03 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி நீரஜ் சோப்ரா அசத்தினார். 2வது சுற்றில் 87.58 மீ தூரம் வீசி அசர வைத்தார். இதனால் முதல் 2 சுற்றுகளில் டாப் இடத்தில் இருந்தார்.இதன் பின்னர் நடைபெற்ற 3,4, 5வது சுற்றுகளில் நீரஜ் சோப்ராவால் பெரியளவில் சோபிக்க முடியவில்லை. ஃபௌல்களே மிஞ்சியது. எனினும் சோப்ராவாவின் 87.58 மீட்டர் என்ற தூரத்தை எந்த ஒரு வீரராலும் தகர்க்க முடியவில்லை. இதனால் இறுதியில் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைக்கும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். இதற்கு முன்னர் பி.வி.சிந்து, மீராபாய் சானு, ரவிக்குமார் தஹியா உள்ளிட்டோர் 6 பதக்கங்களை இந்தியாவுக்கு பெற்றுத் தந்தனர்.

 தடைகள் கொண்ட தடகளம்

தடைகள் கொண்ட தடகளம்

இதுமட்டுமல்லாமல் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக புதிய சரித்திரம் படைத்துள்ளார் அவர். ஒலிம்பிக்கில் தனி நபர் ஆட்டத்தில் தங்கப்பதக்கம் வெல்லும் 2வது இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வென்றிருந்தார். ஒலிம்பிக் தொடரில் இந்தியா கடந்த 1920ம் ஆண்டு முதல் பங்கேற்று வருகிறது. பல்வேறு போட்டிகளிலும் இந்தியா பதக்கங்களை வென்று வந்தாலும், தடகளப்போட்டியில் மட்டும் இதுவரை ஒரு பதக்கத்தை கூட வென்றதில்லை. இந்நிலையில் பதக்கத்திற்காக 100 ஆண்டுகளாக காத்திருந்த இந்தியாவின் ஏக்கத்தை நீரஜ் சோப்ரா போக்கியுள்ளார்.

 பிசிசிஐ , சிஎஸ்கே

பிசிசிஐ , சிஎஸ்கே

இவ்வாறு தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்தியர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்திய கிரிக்கெட் சங்கமான பிசிசிஐ-யும் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா நேற்று வெளியிட்ட அறிவிப்பில், "ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வென்றுக் கொடுத்த நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி ரொக்கப்பரிசு வழங்கப்படும். வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் ஆனு, ரவிக்குமார் தஹியா ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

 ரூ.1.25 கோடி

ரூ.1.25 கோடி

அதேபோல் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும். இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு ரூ.1.25 கோடி வழங்கப்படும். 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய தேசிய விளையாட்டுக்கு வெற்றி தேடித் தந்தமைக்கான கவுரவம் இது. நமது வீரர்கள், வீராங்கனைகள் இந்தியாவை டோக்கியோ ஒலிம்பிக் அரங்கில் பெருமைப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு இந்தப் பரிசை வழங்குவதில் பிசிசிஐ பெருமிதம் கொள்கிறது" என்று ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

 ரூ.1 கோடி பரிசு

ரூ.1 கோடி பரிசு

அதுமட்டுமின்றி, இந்த மகத்தான வரலாற்றுச் சாதனையை நினவுகூரும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் சார்பாக, நீரஜ் சோப்ராவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் மற்றும் கொண்டாடப்படும் விளையாட்டு அணியான சிஎஸ்கே மற்றும் லெப்டினன்ட் கர்னல் எம்.எஸ்.தோனி ஆகியோர் இந்திய ராணுவத்தில் இளைய அதிகாரியான நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர். மேலும், நீரஜ் சோப்ராவின் சிறப்பான சாதனையைப் பாராட்டும் சிஎஸ்கே, 1 கோடி ரூபாய் பரிசுத் தொகையுடன், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 8758 என்ற எண் கொண்ட ஒரு சிறப்பு ஜெர்சியை உருவாக்கவிருக்கிறது.

 ஈர்த்துவிட்டார்

ஈர்த்துவிட்டார்

இதுகுறித்து சிஎஸ்கே செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "டோக்கியோ 2020 இல் நீரஜ் சோப்ராவின் முயற்சி மில்லியன் கணக்கான இந்தியர்களை ஊக்குவிக்கும் என்பதால், இந்தியர்கள் என்ற வகையில் நாங்கள் பெருமைப்படுகிறோம். ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் அவர் 87.58 மீட்டர் தூரத்தை எறிந்து ஒட்டுமொத்த தேசத்தையும் ஈர்த்துவிட்டார்" என்றார்.

Story first published: Sunday, August 8, 2021, 9:09 [IST]
Other articles published on Aug 8, 2021
English summary
bcci and csk awarding 1 crore neeraj chopra - நீரஜ் சோப்ரா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+