Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னை மாதிரியே என் மகன்களும் பெண் ரசிகர்களைப் பெற வேண்டும்: டேவிட் பெக்காம் ஆசி

லண்டன்: எனது 3 மகன்களும் என்னைப் போலவே பெண் ரசிகைகளை ஈர்ப்பவர்களாக இருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார் பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம்.

இங்கிலாந்து கால்பந்து வீரரான டேவிட் பெக்காமின் அதிரடி ஆட்டத்திற்கு லட்சக்கணக்கான பெண் ரசிகைகள் உள்ளனர்..

இந்நிலையில் 38 வயதான டேவிட் பெக்காம் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தனது மகன்களும் தன்னைப் போலவே பெண்களைக் கவருபவர்களாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது :-

அப்பா வழியில்....

அப்பா வழியில்....

எனது 3 மகன்களும் என்னைப் பின்பற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன். எனது மகன்கள் புரூக்ளின் (வயது 14). ரோமியோ (வயது 11) மற்றும் கிரஜ் (வயது 8) பார்ப்பதற்கு நல்ல தோற்றம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

காதல் மன்னர்கள்....

காதல் மன்னர்கள்....

அவர்கள் அனைவரும் மிக பணிவானவர்கள். நகைச்சுவை விரும்பிகள். பெண்களை ஈர்ப்பவர்களாக அவர்கள் வருவார்கள்.

என்னை மாதிரியே....

என்னை மாதிரியே....

எங்களது மூத்த மகன் புரூக்ளின், என்னை போன்று தலைமுடி அமைப்பை கொண்டவர். அவர் அத்தகைய அமைப்பை கொண்டிருக்க வேண்டும் என்றே நான் விரும்பினேன்.

காதலர் தினக் கொண்டாட்டம்...

காதலர் தினக் கொண்டாட்டம்...

இந்த வருடம் காதலர் தினத்தை எனது மனைவி விக்டோரியாவுடன் கொண்டாட முடியாது என வருத்தத்துடன் கூறியுள்ளார் பெக்காம்.

Story first published: Sunday, February 9, 2014, 16:30 [IST]
Other articles published on Feb 9, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+