Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஹேய்.. 'பெட்' வச்சுக்கலாமா”… ஒபாமாவை 'டீஸ்' செய்த பெல்ஜியம் பிரதமர்!

சால்வடார்: எங்க பெல்ஜியம் அணிதான் காலிறுதிக்குத் தகுதி பெறும். பெட் வச்சுக்கலாமா.. நாங்க ஜெயிச்சா பெல்ஜியம் பீர் பரிசாகத் தருகிறேன் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு, பெல்ஜியம் பிரதமர் டிவிட்டர் மூலம் வைத்த பெட் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பை ரவுண்ட் 16 சுற்றுக்கு பெல்ஜியமும், அமெரிக்காவும் தகுதி பெற்றுள்ளன.

இந்த சுற்றில் இரு அணிகளும் மோதவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணி காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். இந்த நிலையில் இப்போட்டியில் பெல்ஜியம்தான் வெல்லும். வென்றால் புகழ் பெற்ற பெல்ஜியம் பீரைப் பரிசாகத் தருவதாக பெட் கட்டியுள்ளார் பிரதமர் எலியோ டி ரூபோ.

லீக் போட்டிகள் ஓவர்

லீக் போட்டிகள் ஓவர்

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் நேற்றுடன் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து விட்டன.

ரவுண்ட் 16

ரவுண்ட் 16

தற்போது பிரேசில், அர்ஜென்டினா உள்பட 16 அணிகள் ரவுண்ட் 16 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. இதில் அமெரிக்கா, பெல்ஜியமும் அடக்கம்.

எச் பிரிவில் டாப்பர் பெல்ஜியம்

எச் பிரிவில் டாப்பர் பெல்ஜியம்

எச் பிரிவில் பெல்ஜியம் அணிதான் முதலிடத்தைப் பிடித்தது. எச் பிரிவில் இடம் பெற்ற அமெரிக்கா 2வது இடத்தைப் பிடித்தது.

ஜூலை 1ல் அமெரிக்கா, பெல்ஜியம் மோதல்

ஜூலை 1ல் அமெரிக்கா, பெல்ஜியம் மோதல்

ஜூலை 1ம் தேதி நடைபெறும் ரவுண்ட் 16 போட்டியில் அமெரிக்காவும், பெல்ஜியமும் மோதவுள்ளன. இதில் வெல்லும் அணி காலிறுதிக்கு முன்னேறும்.

ஒபாமாவுக்கு சவால்

இந்த நிலையில்தான் பீர் பெட் கட்டியுள்ளார் பெல்ஜியம் பிரதமர் ரூபோ. இதுதொடர்பாக அவர் அமெரிக்க அதிபருக்கு விடுத்துள்ள டிவிட் சவாலில், ஹேய் பராக் ஒபாமா.. பெல்ஜியம் அணி காலிறுதிக்குத் தகுதி பெறும். நான் பெல்ஜியம் பீரை பெட்டாக கட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

1800 ரீட்வீட்

1800 ரீட்வீட்

பெல்ஜியம் பிரதமரின் இந்த டிவிட் செய்தியை 1800 முறை ரீட்வீட் செய்துள்ளனர்.

ஒபாமாவிடமிருந்து பதில் இல்லை

ஒபாமாவிடமிருந்து பதில் இல்லை

இந்த பெட்டுக்கு இதுவரை ஒபாமாக பதில் தரவில்லை. நேற்று நடந்த அமெரிக்கா - ஜெர்மனி இடையிலான போட்டியை ஒபாமா ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் பறந்தபடி பார்த்து ரசித்தார் என்பது நினைவிருக்கலாம்.

ரூபோவின் சவாலுக்கு நிச்சயம் ஒபாமா பதிலளிப்பார் என்று தெரிகிறது.. அவர் என்ன பதில் பெட் வைக்கப் போகிறாரோ....

Story first published: Friday, June 27, 2014, 19:56 [IST]
Other articles published on Jun 27, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+