Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ஓவர்நைட்"டில் புகழுக்கு உயர்ந்து அதே வேகத்தில் வீழ்ந்த பெல்ஜியம் அழகி...!

பிரேசிலியா: ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் புகழ் உச்சியை எட்டிய பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த 17 வயது மாடல் அழகி, அதேபோல இன்னொரு புகைப்படம் மூலம் தரைக்கு வந்து விட்டார்.

இரண்டே புகைப்படங்களால் இவர் அதி வேகமாக உலகப் புகழையும் பெற்று ஓய்ந்து விட்டார் என்பது சுவாரஸ்யமானது.

அப்பெண்ணின் பெயர் ஆக்ஸெல் டெஸ்பிஜிலேரே. 17 வயதுதான் ஆகிறது. இவருக்கு. பெல்ஜியத்தைச் சேர்ந்தவர். உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிக்கு பிரேசிலில் முகாமிட்டிருந்த இவர் உலகப் புகழ் பெற்றுள்ளார் இரண்டு புகைப்படங்கள் மூலம்.

சாதாரண ரசிகை

சாதாரண ரசிகை

ஆக்ஸெல் அழகானவர், கால்பந்துப் போட்டியின் தீவிர ரசிகையும் கூட. இவர் தனது பெல்ஜியம் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பிரேசிலில் முகாமிட்டிருந்தார்.

வைரலாக பரவிய புகைப்படம்

வைரலாக பரவிய புகைப்படம்

வித்தியாசமான மேக்கப்புடன், கலக்கலாக ஸ்டேடியத்தில் காணப்பட்ட இவர் அத்தனை மீடியா கேமராக்களின் கண்களிலும் சிக்கினார்.

ஆர்ப்பரிப்பு.. அழகு

ஆர்ப்பரிப்பு.. அழகு

பெல்ஜியம் போட்டியின்போது இவர் மைதானத்தில் உற்சாகமாகக் காணப்பட்ட, உற்சாகக் குரல் எழுப்பிய காட்சிகள் புகைப்படமாகி இன்டர்நெட்டில் படு வேகமாக பரவியது. வைரலாக மாறியது. உலகப் புகழ் பெற்றார் ஆக்ஸெல்.

புகழாரம் சூட்டிய லோரியல்

புகழாரம் சூட்டிய லோரியல்

உலகப் புகழ் பெற்ற காஸ்மெட்டிக் நிறுவனமான லோரியலும் ஆக்ஸெலைப் புகழ்ந்து தள்ளியது. இந்த கால்பந்துத் தொடரின் மிக அழகான ரசிகை இவர்தான் என்றும் பாராட்டியது. அத்தோடு நில்லாமல், ஆக்ஸெலை தனது தயாரிப்புகளுக்கான புதிய மாடலாகவும் புக் செய்வதாகவும் அறிவித்து ஆக்ஸெலுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

தலைகீழாக மாறிய தலைவிதி

தலைகீழாக மாறிய தலைவிதி

ஆக்ஸெலின் தலைவிதி இப்படி ஒரே ஒரு புகைப்படம் மூலம் மாறிய நிலையில் அதே போல இன்னொரு புகைப்படம் அவரை மீண்டும் பழைய இடத்துக்கே கொண்டு போய் விட்டது.

வேட்டைக்காரி படம்

வேட்டைக்காரி படம்

பெல்ஜியம்- அமெரிக்கா இடையிலான காலிறுதிப் போட்டியின்போது ஆக்ஸெல் தனது பேஸ் புக் பக்கத்தில் ஒரு படத்தைப் போட்டிருந்தார். அதில் ஒரு வேட்டையாடப்பட்ட மானுக்கு அருகே ஆக்ஸெல் துப்பாக்கியுடன் இருப்பது போல இருந்தது. அதில், ஆப்பிரிக்கர்களால் வேட்டையாடப்பட்ட மான் இது. இன்று நாம் அமெரிக்கர்களை வேட்டையாடப் போகிறோம் என்று கூறியிருந்தார் ஏக்ஸெல்.

குவிந்த கண்டனங்கள்

குவிந்த கண்டனங்கள்

இந்தப் புகைப்படமும் வைரலாக பரவியது. அவ்வளவுதான், ஆக்ஸெலுக்கு சகட்டுமேனிக்கு கண்டனங்கள் குவியத் தொடங்கின. ஸ்தம்பித்துப் போனார் ஆக்ஸெல்.

ஒப்பந்தத்தை ரத்து செய்த லோரியல்

ஒப்பந்தத்தை ரத்து செய்த லோரியல்

பார்த்தது லோரியல். ஏக்ஸெலை மாடல் அழகியாக்குவதாக வெளியிட்ட அறிவிப்பை அது ரத்து செய்து விட்டது.

சும்மாதானப்பா போட்டேன்

சும்மாதானப்பா போட்டேன்

இந்த சர்ச்சை குறித்து தற்போது தனது பேஸ்புக்கில் மன்னிப்பு கேட்டுள்ள ஏக்ஸெல், அதை நான் சும்மாதான் போட்டேன். ஜோக்குக்காக போட்டேன். யாரையும் புண்படுத்தப் போடவில்லை என்று கூறியுள்ளார்.

நேரம் சரியில்லாட்டி இப்படித்தான்.....நடக்கும்!

Story first published: Sunday, July 13, 2014, 12:27 [IST]
Other articles published on Jul 13, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+