Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ கபடி.. புனேயிடம் பெங்கால் சரண்டர்

அகமதாபாத்: புரோ கபடி சீசன் 5 போட்டிகளில், ஜோன்களுக்கு இடையேயான போட்டிகள் நேற்று துவங்கின. இதில், நடந்த முதல் ஆட்டத்தில், புனேரி பல்தான் அணி 34 - 17 என்ற புள்ளிக் கணக்கில், பெங்கால் வாரிய்ஸ் அணியை வென்றது.

புரோ கபடி போட்டிகளில், ஜோன்களுக்கு இடையேயான போட்டிகள் நேற்று துவங்கின. இதில், நடந்த முதல் ஆட்டத்தில், ஜோன் ஏ-யில் உள்ள புனேரி பல்தான் அணியும், ஜோன் பி-யில் உள்ள பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின.

Bengal surrenders to Pune

புனே அணியின் சந்தீப் நர்வால் (7 புள்ளிகள்), கிரிஷ் எர்நாக் (4 புள்ளிகள், ஜி.பி.மோரி (6 புள்ளிகள்) என, அனைத்து வீரர்களும் மிகச்சிறப்பாக விளையாடினர்.

ஆனால், இதற்கு ஈடு கொடுக்கும் வகையில், ஒருங்கிணைந்து செயல்பட முடியாமல், பெங்கால் வாரியர்ஸ் அணி சிதறுண்டது. மனீந்தர் சிங்(6y புள்ளிகள்), ரான் சிங் (7 புள்ளிகள்) எடுத்தாலும், புனேயின் திட்டமிட்ட, ஒருங்கிணைந்த ஆட்டத்துக்கு முன் செல்லா காசாகிவிட்டனர்.

முதல் பாதியின் இறுதியில், 17-10 என்ற கணக்கில் முன்னிலை இருந்த புனே, தொடர்ந்து புள்ளிகளைச் சேர்த்தது. இறுதியில், 17 புள்ளிகள் வித்தியாசத்தில், 34 -17 என்ற கணக்கில் புனே சுலபமாக வென்றது.

இதன் மூலம் புனே, 3 போட்டிகளில், 2 வெற்றி, ஒரு தோல்வியுடன், 11 புள்ளிகளுடன், ஜோன் ஏ-யில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜோன் பி-யில் உள்ள பெங்கால் அணியும் அதே புள்ளிகளுடன், ஜோன் பி-யில், 5வது இடத்தில் உள்ளது.

Story first published: Thursday, August 17, 2017, 13:47 [IST]
Other articles published on Aug 17, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+