Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாருக்கு இப்ப வயசு 89.. 3வது முறையாக அப்பாவாயிட்டாரு.. டோட்டல் மகிழ்ச்சியில் பெர்னி குடும்பம்

மிலன்: பார்முலா ஒன் கார்ப் பந்தயங்களில் புதுமைகள் பலவற்றைப் புகுத்தி அதை சீரமைத்த முன்னோடிகளில் ஒருவரான பெர்னி எக்கல்ஸ்டோன் தந்தையாகியுள்ளார். அவருக்கு தற்போது வயது 89 ஆகும்.

Recommended Video

Top 10 players with most catches in International cricket

1978 முதல் 2017 வரை பல புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்து பார்முலா 1 கார்ப் பந்தயத்துக்கு தனி கெத்து சேர்த்தவர் பெர்னி. இவர் மொத்தம் 3 திருமணம் செய்துள்ளார்.

முதல் இரு திருமணங்கள் மூலம் அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். தற்போது இவரது மூன்றாவது மனைவி பேபியோனா புளோசி கர்ப்பமடைந்துள்ளாராம். இதனால் பெர்னி பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். பெர்னியை விட பாதி வயது (44 வயது) கொண்டவர் புளோசி. இவருக்கு வருகிற ஜூலை மாதம் குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் தேதி குறித்துள்ளனராம்.

மனைவியுடன் பிரேசிலில் பெர்னி

மனைவியுடன் பிரேசிலில் பெர்னி

பெர்னி தனது மனைவியுடன் பிரேசிலில் வசித்து வருகிறார். அவரிடம் மீண்டும் தந்தையாகியிருப்பது குறித்து ஒரு செய்தித்தாள் கேட்டபோது, இதில் என்ன விசேஷம்.. வழக்கத்திற்கு விரோதமாக ஏதாவது நடந்து விட்டதா என்று குறும்புடன் கேட்டுள்ளார் பெர்னி. அத்தோடு நில்லாத அவர், முன்பு போல எனக்கு இப்போது வேலை இல்லை. வீட்டில் சும்மாதான் இருக்கிறேன். எனவேதான் இது நடந்துள்ளது என்றும் கூறி சிரித்துள்ளார்.

வயசுக்கு சம்பந்தில்லை

வயசுக்கு சம்பந்தில்லை

மேலும் அவர் கூறுகையில், எனக்கு இப்போது 89 வயதாகிறது. ஆனாலும் 29 வயது போலத்தான் உணர்கிறேன். இரண்டு வயதுக்கும் பெரிதாக வித்தியாசம் கிடையாது. எனது மனைவி (பேபியோனா) குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் மிகவும் திரில்லாக இருக்கிறார். இதை பெரிதாக கொண்டாட நாங்கள் விரும்பவில்லை. காரணம், வழக்கமாக கணவன் மனைவி இடையே நடப்பதுதான் இங்கும் நடந்துள்ளது என்றார் பெர்னி.

மனைவிக்காக மகிழ்ச்சி அடைகிறேன்

மனைவிக்காக மகிழ்ச்சி அடைகிறேன்

நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.. எனது மனைவிக்காகவும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை நன்றாக அவர் பார்த்துக் கொள்கிறார். என்ன அவரை விட நான் சீக்கிரம் போய் விடுவேன் (மரணம் குறித்து சொல்கிறார்). அவர் கொஞ்ச காலம் கழித்து வருவார். ஆனால் எனக்குப் பிறகு யாராவது ஒருவர் அவருக்கு நிச்சயம் கிடைப்பார் என்றும் பெர்னி கூறியுள்ளார்.

நிறைய அனுபவம் இருக்கு

நிறைய அனுபவம் இருக்கு

வயது ஆக ஆக நல்ல பெற்றோராக திகழும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வகையில் நான் நிறைய அனுபவங்களை சேகரித்துள்ளேன். அது எனக்கு குழந்தை வளர்ப்புக்கு உதவும். இப்போது கொரோனாவைரஸ் காலம். அதுகுறித்த விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கிறது. அனைவருமே கவனமுடன் இருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த வைரஸ் அபாயகரமானதாக இருக்கிறது என்றார் அவர்.

Story first published: Wednesday, April 8, 2020, 10:08 [IST]
Other articles published on Apr 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+