Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாயுடன் கொஞ்சும் புவனேஷ்வர் குமார்.. என்ன பார்வை.. இந்தப் பார்வை.. !

மீரட்: நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ என்று ஒரு பாட்டு உண்டு. அது போலத்தான் நம்ம வேகப் பந்து வீச்சாளர் புவனேஷ் குமாரும், அவரது செல்ல நாயும். எப்போதும் இவர்களை ஒன்றாகவே பார்க்கலாம்.

புவனேஷ்வர் குமார் ஒரு நாய் வளர்த்து வருகிறார். ரொம்ப பெட் இருவரும். பிரிந்தே இருக்க மாட்டார்கள். புவனேஷ்வர் குமார் எங்கு போனாலும் இதுவும் கூடவே ஒட்டிக் கொண்டு வந்து விடுமாம். வெளிநாட்டுக்குப் போகும்போது மட்டும்தான் இவர்கள் பிரிந்திருப்பார்கள். உள்ளூர் என்றால் இருவரையும் பிரிந்து பார்க்கவே முடியாது.

இந்த நிலையில் தனக்கும் தனது நாய்க்கும் இடையிலான காதலை புகைப்படம் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார் புவனேஷ்வர் குமார். இவர் இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள பதிவு தற்போது வைரலாகியுள்ளது.

நாயும் நானும்

நாயும் நானும்

மொத்தம் 2 படங்கள் போட்டுள்ளார் புவனேஷ்வர் . முதல் படத்தில் ஒரு புல்வெளியில் அவரும் அவரது நாய்க்குட்டியும் படுத்துள்ளனர். நேருக்கு நேர் படத்தில் விஜய்யும் சூர்யாவும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வது போல இருவரும் படுத்தபடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டுள்ளனர். அப்போது நாய் குட்டியாக உள்ளது. இந்தப் படத்திற்கு அவரது மனைவி நூபுர் நகர் முதல் ஆளாக வந்து மை லவ்ஸ் என்று இருவரையும் செல்லமாக கொஞ்சி கமெண்ட் போட்டுள்ளார்.

பிரமாண்ட வளர்ச்சி

பிரமாண்ட வளர்ச்சி

அடுத்த படம் சில வருடங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்டது. அதில் நாய் நன்றாக வளர்ந்து பிரமாண்டமாக காணப்படுகிறது. இப்போது வீட்டில் தரையில் இருவரும் நேருக்கு நேர் பார்த்தபடி படுத்துக் கொண்டுள்ளனர். நாயும், புவனேஷ்வரும் ஏதோ மெளன பாஷையால் தீவிரமாக பேசிக் கொண்டிருப்பது போல இருக்கிறது. அப்படி இருக்கிறது இருவரது பார்வைகளும்.

ரசிகர்கள் கமெண்ட்

ரசிகர்கள் கமெண்ட்

இந்த இரு படங்களையும் சேர்த்து ஒரே படமாகவும் போட்டுள்ளார் புவனேஷ்வர். ரசிகர்கள் பலரும் இந்தப் படங்களுக்கு கமெண்ட்டுகளைக் குவித்து வருகின்றனர். சிலர், நாய்க்குத்தான் வயதானது தெரிகிறது. ஆனால் புவி அப்படியே இளமையாக இருக்கிறார் என்றும் கமெண்ட் போட்டுள்ளனர். இந்தப் படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது.

மெளன பாஷை

மெளன பாஷை

கிரிக்கெட் இல்லை. விளையாட முடியவில்லை. வீட்டுக்குள்ளேயே சுத்தி சுத்தி எல்லோருக்கும் போரடிச்சுப் போயிருசசு. இந்த நிலையில் புவனேஷ்வர் போடடுள்ள இந்தப் புகைப்படத்தில் அவரும் எவ்வளவு போராக உணர்கிறார் என்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளார். ஒரு வேளை நம்ம நிலைமை இப்படி வெட்டியாக இருக்க வேண்டியதாப் போச்சேடா என்று நாயுடன் பேசிக் கவலையைப் பகிர்ந்திருப்பாரோ புவி!

Story first published: Monday, June 8, 2020, 11:24 [IST]
Other articles published on Jun 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+