ஷமிதாப் விளம்பரத்துக்காக கிரிக்கெட் கமெண்டரியில் குதிக்கும் அமிதாப்!
மும்பை: ஷமிதாப் படக் குழுவினர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவியுடன் இணைந்து ஒரு புதிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதாவது ஷமிதாப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள அமிதாப் பச்சன், இந்தியா பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பைக் கிரி்க்கெட் போட்டியை நேரடியாக வர்னணை செய்யவுள்ளார்.
தனுஷ், அமிதாப் பச்சன் இணைந்து நடித்துள்ள படம் ஷமிதாப். இதில் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் ஷமிதாப் பட புரமோஷனின் ஒரு பகுதியாக உலகக் கோப்பைப் போட்டி ஒன்றுக்கு அமிதாப் பச்சனை கமெண்டரி கொடுக்க வைக்கவுள்ளனர்.
14 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பைப் போட்டித் தொடர் பிப்ரவரி 14-ம் தேதி தொடங்கி, மார்ச் 29-ம் தேதி முடிவடைகிறது. ஆஸ்திரேலியாவில் 26 போட்டிகளும், நியூசிலாந்தில் 23 போட்டிகளும் நடைபெறும்.
இந்த போட்டியில் இந்தியா பி- பிரிவில் இடம் பிடித்துள்ளது. பாகிஸ்தானுடன் இந்த உலக கோப்பையில் இந்தியா தனது முதல் போட்டியை சந்திக்க உள்ளது. பிப்ரவரி 15ம்தேதி ஞாயிற்றுக்கிழமை இப்போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் அமிதாபச்சன் கிரிக்கெட் வர்னணை செய்கிறார். அவருடன் கபில் தேவ், சோயப் அக்தர், ஹர்ஷா போக்ளே ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications