Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிகில் விஜய்யின் ஜெர்ஸி நம்பரை கவனிச்சீங்களா? யாருன்னு கண்டுபிடிச்சாச்சு!!

சென்னை : பிகில் திரைப்படத்தில் விஜய் அணிந்துள்ள ஜெர்ஸி எண் குறித்த ரகசியம் தற்போது தெரிய வந்துள்ளது.

நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி இணையத்தை உண்டு இல்லை என ஆக்கி வருகிறது.

ட்விட்டரில் இங்கிலாந்து - இலங்கை உலகக்கோப்பை போட்டியை தூக்கி அடித்து உலக அளவில் செம ட்ரென்டிங் அடித்து வருகிறது.

கையில் கால்பந்து

கையில் கால்பந்து

இந்த முதல் போஸ்டரில் விஜய் இரட்டை வேடத்தில் இடம் பெற்றுள்ளார். வயதான தோற்றத்தில் இருக்கும் விஜய் மீன் மார்கெட் தாதா போலவும், இள வயது விஜய் கையில் கால்பந்து வைத்துக் கொண்டு நிற்பது போலவும் காட்சி இடம் பெற்றுள்ளது.

விளையாட்டு + அரசியல்

விளையாட்டு + அரசியல்

இள வயது விஜய் கால்பந்து வைத்துக் கொண்டு இருப்பதால் இது விளையாட்டு + அரசியல் கலந்த படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒரே ஒரு போஸ்டரை வைத்துக் கொண்டு ஆயிரம் கதை கண்டுபிடிக்கும் நம் ஊர் ஆட்கள், இந்த போஸ்டரையும் விட்டு வைக்கவில்லை.

இது போதாதா?

இது போதாதா?

இள வயது விஜய்யின் ஜெர்ஸி எண் பலரது கண்களை உறுத்தி உள்ளது. அந்த ஜெர்ஸியில் "எண் 5" பொறிக்கப்பட்டு இருக்கிறது. கையில் கால்பந்து, ஜெர்ஸியில் எண் ஐந்து. இது போதாதா ஆராய்ச்சி செய்ய? எந்த கால்பந்து வீரர் ஐந்தாம் எண் ஜெர்ஸி அணிவார் என கண்டுபிடித்து இருக்கிறார்கள் சிலர்.

யார் அந்த வீரர்?

யார் அந்த வீரர்?

ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல முன்னாள் கால்பந்து வீரர் ஜினடின் ஜிடேன் எண் 5ஐ அணிந்து விளையாடியுள்ளார் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. ஜிடேன் ஃபிரான்ஸ் நாட்டுக்கும், யுவெண்டஸ், ரியல் மாட்ரிட் உள்ளிட்ட பிரபல கிளப் அணிகளுக்காகவும் விளையாடி உள்ளார்.

ரியல் மாட்ரிட்

ரியல் மாட்ரிட்

அதில் ரியல் மாட்ரிட் அணியில் மட்டும் ஜிடேன் 5ஆம் எண் ஜெர்ஸியை அணிந்து ஆடினார். அந்த அணிக்காக பல சாதனைகளை செய்து குவித்தார். மற்ற அணிகளுக்காகவும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், ரியல் மாட்ரிட் அணியில் தான் ஜிடேன் அதிகம் கலக்கினார்.

பாண்டிச்சேரி?

பாண்டிச்சேரி?

அவரது ஐந்தாம் எண் ஜெர்ஸி தான் கால்பந்து வீரராக விஜய் அணிந்துள்ளார் என்கிறார்கள். ஜினடின் ஜிடேன் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் ஆவார். ஆமா.. ஜிடேன் ஃபிரான்ஸ் நாட்டுக்காரர்.. அப்படி பார்த்தால் பிகில் படம் பாண்டிச்சேரியில் நடக்குதோ?

Story first published: Friday, June 21, 2019, 20:29 [IST]
Other articles published on Jun 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+