Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ட்ரென்டை பிடித்த பிகில்.. அப்பா மீன் மார்கெட்.. பையன் ஃபுட்பால்.. ஒரே விளையாட்டு தான்!

சென்னை : நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் முதல் போஸ்டர் அட்டகாசமாக வெளியாகி சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது.

பலரும் இந்தப் படத்தின் ஒரு போஸ்டரை வைத்துக் கொண்டு வழக்கம் போல கதை என்ன என "கதை" விட்டு வருகிறார்கள்.

அட்லீ எப்போதும் என்ன செய்வார் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை தான் என்றாலும், அவர் படங்களில் சுவாரசியத்துக்கு குறைவு இருக்காது.

என்ன ட்ரென்ட்?

என்ன ட்ரென்ட்?

எப்படியாவது ட்ரென்டை பிடித்து விடுவார். இந்த முறையும் ஒரு ட்ரென்டை பிடித்துள்ளார். அது விளையாட்டு. ஆம்.. "ஸ்போர்ட்ஸ் மூவீஸ்" என்பது உலக அளவில் பெரிய மார்கெட் கொண்டவை. பெரிய நடிகர்கள் இல்லாமலேயே கூட இந்த வகை படங்கள் கல்லா கட்டி விடும்.

விளையாட்டு தந்த வாழ்க்கை

விளையாட்டு தந்த வாழ்க்கை

நம் ஊரில் கூட வெண்ணிலா கபடி குழு போன்றவை புதுமுக நடிகர்களை வைத்து பெரிய வெற்றியை பெற்றது. அதில் நடித்த பல நடிகர்களுக்கும், இயக்குனருக்கும் அந்தப் படம் வாழ்க்கை கொடுத்தது. அதே விளையாட்டை மையமாக கொண்ட திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்தால். அவர் ரசிகர்கள் அந்தப் படத்தை எப்படி கொண்டாடுவார்கள்?

கையில் பந்து

கையில் பந்து

இது தான் அட்லீ இப்போது பிடித்திருக்கும் ட்ரென்ட். முதல் போஸ்டரில் இரட்டை வேடத்தில் (கரெக்ட் தானே?) இருக்கிறார் விஜய். அதில் ஒருவர் மீன் மார்கெட் தாதா போல வயதான தோற்றத்தில் இருக்கிறார். இள வயதில் இருக்கும் விஜய் கையில் கால்பந்து வைத்துக் கொண்டு இருக்கிறார்.

ஹிட் அடிக்கும்

ஹிட் அடிக்கும்

ரசிகர்களின் கணிப்பு இது கால்பந்து சம்பந்தப்பட்ட படம் என்பதே. எப்படியும் ஹிட் அடிக்கும் விளையாட்டு ஃபார்முலா ஒருபுறம். அப்படியே சமீப காலங்களில் விஜய் படங்களில் தெறிக்கும் அரசியலை, இந்தப் படத்தில் கையாள மீன் மார்க்கெட் தாதா என சரியாக ட்ரென்டை பிடித்துள்ளார் அட்லீ.

அடுத்த போஸ்டர்

அடுத்த போஸ்டர்

இது முழுக்க முழுக்க கால்பந்து விளையாட்டுப் படமாக இருக்குமா? அல்லது அரசியல் விளையாட்டு படமாக இருக்குமா என்பது அடுத்த போஸ்டர் வரும் போது தெரிந்து விடும் என ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Story first published: Friday, June 21, 2019, 19:54 [IST]
Other articles published on Jun 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+