பார்ரா... ஓட்டத்திற்கு மத்தியில் போஸ் கொடுக்கவெல்லாம் உசேன் போல்ட்டுக்கு நேரமிருக்கே!
ரியோ டி ஜெனீரோ: மில்லியன் டாலர் படம் இது. இந்தப் படம் இப்போது வைரல் ஆகப் பரவி வருகிறது. 100 மீட்டப் போட்டியில் ஜமைக்காவின் மின்னல் வீரர் உசேன் போல்ட் பங்கேற்று வெற்றிக் கோட்டை நெருங்கியபோது எடுக்கப்பட்ட படம் இது.
வெற்றிக் கோட்டை நெருங்கிய நிலையில் தனக்குப் பக்கத்தில் ஓடி வந்த வீரர்களைத் திரும்பிப் பார்த்தபடி விரைகிறார் போல்ட். அப்போது எடுக்கப்பட்ட படம்தான் இது. இந்தப் படத்தை எடுத்தவர் கேமராமேன் கேமரூன் ஸ்பென்சர். தனது டிவிட்டர் பக்கத்தில் இந்தப் படத்தைப் போட்டுள்ளார் கேமரூன்.
ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்தில் 3வது முறையாக போல்ட் தங்கம் வென்ற ஓட்டம் இது. ஒலிம்பிக் வரலாற்றில் இப்படி தொடர்ந்து மூன்று முறை 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வெல்வது முதல் முறையாகும்.
செம ஹிட்
இப்போது இந்தப் படம் செம ஹிட்டாகி விட்டது. பலரும் இதை ஷேர் செய்கின்றனர். கூடவே இதை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்களும் கொடி கட்டிப் பறக்கின்றன.
எதெல்லாம் துரத்துது பாருங்க
லூக் கிரிப்வாக்கர் என்பவர் போட்டுள்ள மீம் இது.
இது மைக்கின் கலாய்ப்பு
இது மைக் டுனிசன் போட்டுள்ள கலாய்ப்பாகும்.
அவனவன் உயிரைக் கொடுத்து ஓடும்போது!
இது ரங்காமெப்ரி போட்டுள்ள காமெடி. அவனவன் உயிரைக் கொடுத்து ஓடுகிறான். இதில் போல்ட் சிரித்தபடி போஸ் தருகிறார் என்று கலாய்த்துள்ளார்.
ரொம்ப ஸ்பீட் பாஸ் நீங்க
ஆலன் கார்னர் போட்டுள்ள கமெண்ட் இது. போல்ட் அதி வேகமாக இருக்கிறார். ஓட்டத்திற்கு நடுவே போஸ் கொடுக்கவெல்லாம் அவருக்கு நேரமிருக்கு பாருங்க என்று கலாய்த்துள்ளார் ஆலன்.


Click it and Unblock the Notifications