ஒன்னு விட்டா பல்லு எகிறிடும்.. அலற விட்ட பூஜா ராணி .. குத்துச்சண்டையில் காலிறுதிக்கு தகுதி
ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், இந்தியா தனது 2வது மெடலை எதிர்நோக்கும் நிலையில், பூஜா ராணியின் பன்ச்கள் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காரணமாக, ரசிகர்கள் இன்றி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பதக்கங்களை வெல்ல பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் மல்லுக்கட்டி வருகின்றனர்.
இந்தியா சார்பில் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடித்தந்தார். ஆனால், அதன்பிறகு இன்று வரை இந்தியாவால் அடுத்த மெடலை வெல்ல முடியவில்லை.

11 தங்கம்
இன்றைய நிலவரப்படி, ஜப்பான் தங்கம் 11, வெள்ளி 4, வெண்கலம் 5 என மொத்தம் 20 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா தங்கம் 10 வெள்ளி 10, வெண்கலம் 9 என மொத்தம் 29 பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது. சீனா தங்கம் 10, வெள்ளி 5, வெண்கலம் 8 என மொத்தம் 23 பதக்கங்களுடன் 3வது இடத்தில் உள்ளது. ரஷ்யா 7 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களுடன் 4 வது இடத்தில் உள்ளது.

ஆக்ரோஷ ஆட்டம்
இந்நிலையில், இன்று பெண்கள் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன. இதில், இந்திய வீராங்கனை பூஜா ராணி, அல்ஜீரியாவின் இச்ரக் சைப் எனும் வீராங்கனையை எதிர்கொண்டார். 16வது பிரிவு ஆட்டமாக இது நடைபெற்றது. ஆட்டம் தொடங்கவுடன் இருவருமே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

2 சுற்றிலும் வெற்றி
இதில், முதல் சுற்றில், 5 - 0 என்று பூஜா ராணி முன்னிலை வகித்தார். தனது அபார பன்ச்கள் மூலம் புள்ளிகளை குவித்தார். இதனால் நிலைகுலைந்த அல்ஜீரிய வீராங்கனை இரண்டாவது சுற்றில் மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பூஜா அவரை டாமினேட் செய்ய விடவே இல்லை. இரண்டாவது சுற்றையும் 5 - 0 என்ற கணக்கில் வென்றார் பூஜா ராணி.

2வது பதக்கம்?
இதன் மூலம், குட்த்துச்சண்டை மிடில் வெயிட் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு பூஜா ராணி முன்னேறினார். காலிறுதியில் வென்றுவிட்டால், இந்தியா தனது தனது 2வது பதக்கத்தை உறுதி செய்துவிடும். ஏற்கனவே, பெண்கள் வேல்டெர்வெயிட் பிரிவில் இந்தியாவின் லோவ்லினா காலிறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications