Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏய்... நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா??

ரியோ டி ஜெனீரோ: ரியோ ஒலிம்பிக்கில் நாளொரு சுவாரஸ்யம். நேற்று நடந்த கலகலப்பு இது. மைதானத்தில் வைத்து ஓரினச் சேர்க்கை காதலர்கள் இருவர் நாம் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டு புரபோஸ் செய்து ஒருவரை ஒருவர் முத்த மழை பொழிந்த ரொமான்ஸ் காட்சி கலகலப்பை ஏற்படுத்தியது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மகளிர் ரக்பி அணியின் வீராங்கனை இசடோரா செருல்லாவும், அவரது காதலி மர்ஜோரி இனியாவும்தான் இந்த சந்தோஷ களேபரத்திற்குக் காரணம்.

பிரேசில் மகளிர் அணி நேற்று ரக்பி இறுதிப் போட்டியில் ஆடியது. அந்தப் போட்டிக்குப் பின்னர்தான் இனியா தனது காதலியிடம் தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு ஆயிரம் பேர் பார்க்க மைதானத்தில் வைத்து புரபோஸ் செய்து அசத்தினார்.

முதல் வீராங்கனை

முதல் வீராங்கனை

இப்படி ஒலிம்பிக் மைதானத்தில் வைத்து திருமணத்திற்குப் புரபோஸ் செய்த முதல் ஓரினச் சேரக்கை ஜோடி இதுதான். அந்த வகையில் ரியோ சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டது.

நீண்ட நாள் காதலர்கள்

நீண்ட நாள் காதலர்கள்

இசடோராவும், இனியாவும் நீண்ட நாள் காதலர்கள். இனியா, நேற்று போட்டி நடந்த டியோடோரா மைதானத்தில் மேனேஜராகப் பணியாற்றி வருகிறார். தனது காதலியான இசடோரா விளையாடுவதை ஆவலுடன் பார்த்து வந்தார். போட்டி முடிந்தததும்தான் அவருக்கு புரபோஸ் செய்யும் எண்ணம் அவரை தொற்றிக் கொண்டது.

தோல்வியை மறக்கடித்த இன்பம்

தோல்வியை மறக்கடித்த இன்பம்

நேற்றைய போட்டியில் பிரேசில் அணி தோல்வியுற்றது. இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற தவறியது. இருப்பினும் இசடோராவுக்கு அந்தக் கவலையை மறக்கடித்து விட்டது இனியாவின் இனிய புரபோசல்.

அன்பே என்னைக் கட்டிக்கோ

போட்டி முடிந்ததும் இசடோராவை நெருங்கிய இனியா, மைக்கை எடுத்து அனைவரும் பார்க்க முழங்காலிட்டபடி இசடோராவிடம் புரபோஸ் செய்தார். இதைப் பார்த்து கூட்டமே ஆரவாரித்தது. இசடோராதான் என் வாழ்க்கை, என் அன்பு, என் காதல்.. எல்லாமே என்று உருகியபடி கூறினார் இனியா.

ஒலிம்பிக் முடியலாம்.. எங்கள் ஓட்டம் தொடரும்

ஒலிம்பிக் முடியலாம்.. எங்கள் ஓட்டம் தொடரும்

மேலும் அவர் கூறுகையில் ஒலிம்பிக் முடிந்து போகலாம். ஆனால் இதுதான் எங்களுக்குத் தொடக்கம். எங்களது ஓட்டம் இனிமையாக தொடரும் என்றார் சிரித்தபடி.

2 வருடக் காதல்

2 வருடக் காதல்

இது 2 வருடக் காதலாகும். இசடோராவுக்காக தனது ஊரை விட்டு சாவோ பாலோ நகருக்கு இடம் பெயர்ந்து வந்தவர் இனியா. தனது காதலில் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பதே இனியாவின் லட்சியமாகும். அவரது கனவும் பலித்தது, இசடோராவுக்கு பிரேசில் அணியில் இடம் கிடைத்து ஒலிம்பிக்கிலும் ஆடி விட்டார்.

42 ஓரினச் சேர்க்கையாளர்கள்

42 ஓரினச் சேர்க்கையாளர்கள்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் 42 ஓரினச் சேர்க்கையாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதுவும் ஒரு சாதனையாகும். இவர்கள் 13 நாடுகளைச் சேர்ந்தவர்கள். இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள்தான் இதில் அதிகம். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 23 பேர்தான் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, August 10, 2016, 11:37 [IST]
Other articles published on Aug 10, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+