Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் வெண்கலம்.. மேரி கோமிற்கு பின் புது சாதனை படைத்த லோவ்லினா.. அசாமின் பாக்சிங் சூறாவளி!

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 பெண்கள் பாக்சிங் 69 கிலோ எடை பிரிவில் இந்தியாவிற்கு வெண்கலம் வாங்கியதன் மூலம் லோவ்லினா போர்கோஹைன் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்திய பாக்சிங் வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாள். ஒலிம்பிக் 2020 பாக்சிங் சுற்று போட்டியில் இந்தியாவின் அனுபவமிக்க மேரி கோம் வெளியேறி அதிர்ச்சி அளித்த நிலையில் இளம் வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மேரி கோமின் தோல்விக்கு பின் எங்கே இந்தியா பாக்சிங்கில் ஒரு பதக்கம் கூட வாங்காமல் போய்விடுமோ என்று பலரும் கவலைப்பட்ட நிலையில் லோவ்லினா போர்கோஹைன் வெண்கலம் பதக்கம் மூலம் ஆறுதல் அளித்துள்ளார்.

வெண்கலம்

வெண்கலம்

ஒலிம்பிக் பெண்கள் பாக்சிங் 69 கிலோ பிரிவு போட்டியில் இந்தியாவின் லோவ்லினதுருக்கி வீராங்கனை புஸேனஸ் சுர்மனேலியிடம் 5:0 என்ற புள்ளி கணக்கில் வீழ்ந்தார். செமி பைனலில் தோல்வி அடைந்ததன் மூலம் இவருக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. இந்த வெண்கலம் மூலம் மேரி கோமிற்கு பின் லோவ்லினா புதிய வரலாறு படைத்துள்ளார்.

இரண்டாவது நபர்

இரண்டாவது நபர்

இந்தியாவில் இருந்து பெண்கள் பாக்சிங்கில் பதக்கம் வெல்லும் இரண்டாவது பெண் என்ற சாதனையை லோவ்லினா படைத்துள்ளார். இன்னொரு பக்கம் ஆண்கள் பாக்ஸர் விஜேந்திர சிங்கை கணக்கில் எடுத்துக்கொண்டால் லோவ்லினாதான் இந்தியாவிற்காக ஒலிம்பிக் பாக்சிங்கில் பதக்கம் வெல்லும் மூன்றாவது நபர்.

முதல் போட்டி

முதல் போட்டி

இந்த சாதனையை தனது முதல் போட்டியிலேயே லோவ்லினா போர்கோஹைன் நிகழ்த்தி உள்ளார். ஆம் இவருக்கு இதுதான் முதல் ஒலிம்பிக். இவருக்கு வயது வெறும் 23தான் ஆகிறது. சிறப்பாக ஆடி வரும் வரும் இன்னும் பல காலங்களுக்கு இந்தியாவின் பாக்சிங் உலகில் கோலோச்ச முடியும். கடந்த வருடம் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர் இந்தியாவிற்கான பயிற்சி ஆட்டங்களில் ஐரோப்பாவில் கலந்து கொள்ள முடியவில்லை.

அசாம்

அசாம்

போதிய பயிற்சி ஆட்டங்களில் கலந்து கொள்ளாமலே இந்த முறை லோவ்லினா வெற்றிபெற்றுள்ளார். இவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். மிகவும் வறுமையான குடும்ப பின்னணியை கொண்டவர். ஏற்கனவே சர்வதேச ஓபன் பாக்சிங் போட்டியில் இவர் தங்கம் பதக்கம் வென்று இருக்கிறார்.. இவர் 2018, 2019 உலக பெண்கள் பாக்சிங்கில் வெண்கல பதக்கம் வென்றார். இதன் மூலம் முதல்முறையாக ஒலிம்பிக்கிற்கும் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, August 4, 2021, 17:33 [IST]
Other articles published on Aug 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+