பிகினி உடையில் கரோலினா மரின்.. வைரலாகும் புகைப்படங்கள்!
டெல்லி: ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துவை தோற்கடித்து இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற ஸ்பெயின் மங்கை கரோலினா மரினின் நீச்சல் உடைப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் மின்னல் போல அசத்திச் சென்றவர் மரின். அவர் விளையாடிய அத்தனை போட்டியும் ரசிகர்களைக் கவர்ந்தது. காரணம், அவரது உறுதியான ஆட்டம். விடாமுயற்சி மற்றும் கடுமையாக போராடிய குணம்.

பி.வி.சிந்துவுக்கு எதிரான போட்டியிலும் கூட அவர் முதல் செட்டை இழந்தபோதிலும், அடுத்த இரண்டு செட்களை கடுமையாகப் போராடி பிடித்து வெற்றி பெற்று தங்கம் வென்றார்.

இந்த நிலையில் மரினின் நீச்சல் உடைப் படங்கள் வைரல் ஆக பரவி வருகின்றன. பிகினி உடையில் அவர் கடற்கரையில் நண்பர்களுடன் ஜாலியாகப் பொழுதைக் கழிக்கும் படங்கள் இவை.

போராளியான வீராங்கனையாக வலம் வரும் மரின் தனது ஓய்வின்போது சாதாரணப் பெண்ணாக மாறி உற்சாகத்துடன், நண்பர்களுடன் குதூகலமாக ஓய்வைக் கழிக்கும் தருணங்களை இந்தப் படங்கள் காட்டுகின்றன.
இந்தப் படங்கள் எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications