Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அர்ப்பணிப்பின் வெற்றியை இணைந்து கொண்டாடுவோம்... ஐபிஎல்லின் பிரமோவை வெளியிட்ட பிசிசிஐ

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் வரும் 19ம் தேதி துவங்கி நவம்பர் 10ம் தேதிவரை நடைபெறவுள்ள நிலையில் அதன் பிரமோவை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

Celebrating the triumph of hope and commitment Together! -IPL 2020 promo Released

தற்போதுள்ள கொரோனா சூழலை கருத்தில் கொண்டு இந்த பிரமோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சூழலில் நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பின் வெற்றியை இணைந்து கொண்டாடலாம் என்று ஐபிஎல் டிவிட்டரில் வீடியோவை வெளியிட்டு கேப்ஷனில் தெரிவித்துள்ளது.

Celebrating the triumph of hope and commitment Together! -IPL 2020 promo Released

ஐபிஎல் 2020 போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மிக மும்மூரமாக நடைபெற்று வருகிறது. ஒருபுறம் துபாயில் குவாரன்டைனை முடித்துக் கொண்டு ஐபிஎல் அணிகள் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன. மறுபுறம் பிசிசிஐ ஸ்பான்ஷர்ஷிப் உள்ளிட்ட விஷயங்களில் தீவிரமாக செயல்பட்டு அனைத்தையும் முடித்துள்ளது. டைட்டில் ஸ்பான்சர் மற்றும் 2 இணை ஸ்பான்ஷர்ஷிப்பையும் சிறப்பாக அமைத்துள்ளது பிசிசிஐ.

ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை நாளை வெளியாகும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கான பிரமோவை தற்போது வெளியிட்டுள்ளது பிசிசிஐ. ஐபிஎல் டிவிட்டர் பக்கத்தில் இந்த பிரமோ வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா சூழல்களுக்கு தக்கபடி இந்த பிரமோ வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பின் வெற்றியை ஒன்றாக கொண்டாடலாம் என்றும் கேப்ஷனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Story first published: Thursday, September 3, 2020, 14:37 [IST]
Other articles published on Sep 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+