அகமதாபாத்: யூசுப் பதானின் அபார ஆட்டத்தால் டெக்கான் சார்ஜர்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
அகமதாபாத்தில் நேற்று ராஜஸ்தானுக்கும், ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸுக்கும் மோதல் நடைபெற்து.
முதலில் பேட் செய்த டெக்கான் அணி 148 ரன்களை எடுத்தது. ரோஹித் சர்மா மட்டுமே அணியில் சிறப்பாக ஆடினார். 49 ரன்களை எடுத்து அவர் ஆட்டமிழந்தார். பிற வீரர்களில் கிப்ஸ் 25, சைமண்ட்ஸ் 22 ரன்களை எடுத்தனர்.
பின்னர் ஆடத் தொடங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் லாம்ப் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். சிறப்பாக ஆடிய அவர் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார்.
அவருடன் இணைந்து ஆடிய யூசுப் பதான் அபாரமாக ஆடினார். 73 ரன்களைக் குவித்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை.
பேட்டிங்கில் அசத்திய ராஜஸ்தான் அணி 15.4 ஓவர்களிலேயே 2 விக்கெட்களை மட்டும் இழந்து 151 ரன்களைக் குவித்து வெற்றி பெற்றது.
இந்தத் தொடரில் ராஜஸ்தான் அணி பெறும் 3வது தொடர் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்ட நாயகனாக யூசுப் பதான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.