For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

“அடேங்கப்பா..” ஏர்திங்ஸ் சதுரங்கப்போட்டி.. உலகின் நம்.1 வீரரை வீழ்த்திய தமிழக சிறுவன் பிரக்ஞானந்தா

சென்னை: உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை தோற்கடித்து அசத்தியுள்ளார் தமிழகத்தின் 16வயது பிரக்ஞானந்தா.

ஏர்திங்ஸ் மாஸ்டர் எனப்படும் செஸ் தொடர் காணொலி காட்சி மூலம் நடைபெற்று வருகிறது.

இதில் சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா மற்றும் உலகின் நம்.1 வீரரான கார்ல்சனும் மோதினர்.

 எப்படி வீழ்த்தினார்

எப்படி வீழ்த்தினார்

இந்த போட்டியில் கார்ல்சன் தான் வெற்றி பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அனைவரின் எதிர்பார்ப்புக்கும் மாறாக கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அவர், 39 நகர்வுகளுடன் ஒட்டுமொத்த ஆட்டத்தையே முடித்துவிட்டார்.

போட்டி விதிமுறை என்ன

போட்டி விதிமுறை என்ன

மொத்தம் 16 பேர் பங்கேற்கும் இந்த தொடர் 8 சுற்றுகளாக நடத்தப்படும். ஒவ்வொரு வெற்றிக்கும் 3 புள்ளிகளும், சமனில் முடிவடைந்தால் 1 புள்ளிகளும் கொடுக்கப்படும். அந்தவகையில் பிரக்ஞானந்தா இன்று தனது 8வது சுற்றில் தான் கார்ல்சனை வீழ்த்தினார். எனினும் பிரக்ஞானந்தாவுக்கு கடந்த சில போட்டிகள் சரியாக அமையவில்லை.

புள்ளிப்பட்டியல்

புள்ளிப்பட்டியல்

இதற்கு முன்னர் ஆடிய 7 போட்டிகளில் பிரக்ஞானந்தா ஒரு வெற்றி, 4 போட்டிகளில் தோல்வி, 2 போட்டிகள் சமன் எனப்பெற்றிருந்தார். அதுவும் கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வி தான். எனவே 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 12வது இடத்தில் உள்ளார். 13 புள்ளிகளுடன் கார்ல்சன் 6ம் இடத்தில் உள்ளார்.

வாழ்த்து மழை

வாழ்த்து மழை

பிரக்ஞானந்தா என்னதான் புள்ளிப்பட்டியலில் பின் தங்கியிருந்தாலும், உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை வீழ்த்தியது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இதற்காக பல்வேறு முன்னணி வீரர்களும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Story first published: Monday, February 21, 2022, 21:48 [IST]
Other articles published on Feb 21, 2022
English summary
Chennai boy Praggnanandhaa beats World No 1 Magnus Carlsen in Airthings Masters
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+