உதவிதான் செய்யல… யாராவது பாராட்டலாமே…? ஆசிய தடகளத்தில் சென்னை அரசு பள்ளி மாணவிக்கு 2 தங்கம்

ஹாங்காங்: ஆசிய அளவிலான இளைஞர் தடகளப் போட்டியின் மகளிர் 100 மீட்டர் தடை ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதலில் சென்னை வீராங்கனை தபிதா 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

ஹாங்காங்கில் 3வது ஆசிய இளைஞர் தடகள விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. சென்னையை சேர்ந்த தபிதா 100 மீட்டர் தடை ஓட்டத்தில் பங்கேற்றார்.

பந்தய தூரத்தை 13.86 வினாடிகளில் கடந்த அவர் முதலிடம் பிடித்து இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார். ஜப்பானை சேர்ந்த மயூகோ 2வது இடத்தையும், சீனாவை சேர்ந்த சின்யூ 3வது இடத்தையும் பிடித்தனர்.

அப்பப்பா..! இப்ப நினைச்சாலும்.. உயிர் பொழச்சு வந்ததே பெரிசு.. சொந்த ஊர் வந்த வங்கதேச வீரர்கள்

தங்கப்பதக்கம்

தங்கப்பதக்கம்

நீளம் தாண்டும் போட்டியிலும் அவர் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். தபிதா 5.86 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றார். சீனாவின் ஹுவா ஷிஹு வெள்ளியும், இந்திய வீராங்கனை அம்பிகா நர்ஸாரி வெண்கலமும் வென்றனர்.

 அரசு பள்ளி மாணவி

அரசு பள்ளி மாணவி

2 தங்கம் வென்று சாதனை படைத்துள்ள தபிதா, செயின்ட் ஜோசப் விளையாட்டு அகடமியில் பயிற்சி பெற்று வருகிறார். இவர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் ஒன் மாணவியாவார்.

 ஆட்டோ ஓட்டுநர்

ஆட்டோ ஓட்டுநர்

தந்தை மகேஷ்வரன் ஆட்டோ ஓட்டுநர். தினமும் பயிற்சிக்கு அழைத்து செல்லும் தாய் மேரி கோகிலா இல்லத்தரசி. இவருடன் பிறந்தவர்கள் 2 அக்கா, ஒரு தம்பி.

 பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

இந்த வெற்றி குறித்து தபிதாவின் பயிற்சியாளர் நாகராஜன் கூறியதாவது: தபிதாஆறாம் வகுப்பு படிக்கும்போது எங்கள் பயிற்சி முகாமில் சேர்ந்தார். கடந்த 6 ஆண்டுகளாக ஆர்வமாகவும், தீவிரமாகவும் பயிற்சி பெற்று வருகிறார்.

 நம்பிக்கை நட்சத்திரம்

நம்பிக்கை நட்சத்திரம்

இன்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி உள்ளார் என்றார். மொத்தம் 12 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இந்தியா இதுவரை 7 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    Read more about: ஹாங்காங்
    English summary
    Asian Youth Championships, Chennai government school student Thabitha wins her second gold.
    Story first published: Sunday, March 17, 2019, 16:58 [IST]
    Other articles published on Mar 17, 2019
    POLLS

    myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற

    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more