U-10 உலக செஸ் சாம்பியனான அரியலூர் மாணவி.. தங்கம் வென்று ஷர்வானிக்கா சாதனை
சென்னை : செஸ் விளையாட்டு உலகின் புதிய மையமாக தமிழ்நாடு மாறி வருகிறது என்று சொன்னால், அது மிகையாகாது. பல உலக சாம்பியன் பட்டத்தை விஸ்வநாதன் ஆனந்த வென்று ஏற்கனவே, தமிழகத்திற்கும், இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நிலையில், தற்போது அவரை பின்தொடர்ந்து பல சாம்பியன்கள் உருவாகி வருகின்றனர்.
ஏற்கனவே செஸ் உலகில் தமிழக வீரர்கள் பிரக்ஞானந்தா, குகேஷ் உள்ளிட்டோர் பல சாதனைகளை செய்து வருகின்றனர். குறிப்பாக, குகேஷ், செலஞ்சர் கோப்பையை வென்ற பிறகு, தற்போது உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பை பெற்று இருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது மகளிர் செஸ் பிரிவிலும், தமிழ்நாட்டிலிருந்து புதிய செஸ் சாம்பியன் உருவாகி வருகிறார். ஆம், அரியலூரை சேர்ந்த 9 வயது வீராங்கனை ஷர்வானிக்கா தான், காமென்வெல்த் இளையோர் செஸ் மற்றும் ஆசிய அளவிலான இளையோர் செஸ் போட்டியில் சாம்பியனாக விளங்குகிறார்.
தற்போது,அல்பெனியாவில் நடைபெற்ற World Rapid and blitz cadet chess போட்டியில் 43 நாடுகளை சேர்ந்த 375 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் அரியலூரை சேர்ந்த ஷர்வானிக்கா, 10 வயதுக்குட்பட்டவர்களுக்கான துரித செஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இதே போன்று பிளிட்ஸ் செஸ் பிரிவில் ஷர்வானிக்கா, வெள்ளி பதக்கத்தை வென்றார். இதே போன்று ஆடவர் பிரிவில் 8 வயதான தெலங்கானா வீரர் திவித் ரெட்டி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். குகேஷை தொடர்ந்து அரியாலூரை சேர்ந்த மாணவி ஷார்வானிக்காவும், செஸ் போட்டியில் ஜோலித்து வருவது, அந்த விளையாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications