உலகிலேயே மிகவும் புத்தி கூர்மையை சோதிக்கும் விளையாட்டு ஒன்று இருக்கிறது என்றால் அது சதுரங்கம் எனப்படும் செஸ் விளையாட்டு தான். இது இந்தியாவிலிருந்து உருவாக்கப்பட்ட விளையாட்டு என்பது வரலாறு.
இந்த நிலையில் செஸ் விளையாட்டின் அடிப்படை விதிகள் என்ன? மொத்தம் எத்தனை காய்கள் இருக்கிறது? அதன் சக்திகள் என்ன? ஒவ்வொரு காயும் எவ்வளவு தூரம் நகர்த்தலாம் என்பதை தற்போது பார்க்கலாம்.

செஸ் அட்டையில் மொத்தம் 64 கட்டம் இருக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இதில் வெள்ளை காய்கள் ஒருபுறமும் கருப்பு நிற காய்கள் மறுபுறமும் இருக்கும். இதில் ஒரு வீரருக்கு 16 காய்கள் வழங்கப்படும். இதில் எட்டு சிப்பாய்கள் (Pawns) முதல் வரிசையிலும் இரண்டாவது வரிசையில் இரண்டு யானை (Rook) இரண்டு குதிரை (knights) இரண்டு மந்திரி( bishop) ஒரு ராணி (queen)ஒரு ராஜா (King) ஆகியோர் இருப்பார்கள்.
இதில் ராஜாவை காப்பாற்றி எதிர் திசையில் உள்ள ராஜாவுக்கு குறி வைப்பது போட்டியின் அம்சமாகும். அதன்படி முதல் வரிசையில் இருக்கும் சிப்பாய்கள் முதல் நகர்த்தலில் மட்டும் இரண்டு கட்டம் வரை நகர்த்தலாம். ஆனால் அதன் பிறகு அவர்களால் ஒரு நகர்த்தலில் ஒரு கட்டம்தான் செல்ல முடியும். சிப்பாய்களால் பின்னோக்கி செல்ல முடியாது. மேலும் குறுக்கே ஒரு நகர்த்தலில் காய் இருந்தால் அதனை சிப்பாய்கள் மூலம் வெட்ட முடியும்.
இதேபோன்று யானை என்ற காய்க்கு பலம் அதிகம் யானைக்காய் முன்னோக்கி எவ்வளவு தூரமும். பின்னோக்கி எத்தனை கட்டமும் பக்கவாட்டில் எவ்வளவு தூரமும் செல்ல முடியும். அதுவே குதிரை என்றால் அந்த காயால் 'L' வடிவத்தில் நான்கு கட்டம் நகர்த்த முடியும். அந்த எல் ஷேப் எந்த திசையில் வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் குதிரையால் நான்கு நகர்த்தல் தான் செல்ல முடியும்.
இதேபோன்று மந்திரியால் குறுக்கே மட்டும் தான் செல்ல முடியும். அந்த காயை வைத்து முன்னோக்கியும் பின்னோக்கியும் குறுக்கே மட்டும் செல்லலாம். இதில் கருப்பு நிற கட்டத்தில் இருக்கும் மந்திரி கருப்பு கட்டத்தில் மட்டும்தான். செல்ல முடியும் வெள்ளை நிறத்தில் இருக்கும் மந்திரி வெள்ளி நிற கட்டத்தில் தான் செல்ல முடியும். செஸ் போர்டிலே மிகவும் பலம் வாய்ந்த காய் என்றால் அது ராணி தான்.எப்படி நமது ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் தான் சக்தி வாய்ந்தவர்களாக குடும்பத்தை வழி நடத்துகிறார்களோ? அதை போல் செஸ்சிலும் ராணி தான் ராஜாவுக்கு பக்க பலம்.
ராணிக்கு யானை மற்றும் மந்திரி ஆகியவற்றின் பலம் இருக்கிறது. இதனால் ஒவ்வொரு வீரரும் ராணியை வைத்து எதிரணியை ஓட விடுவார்கள். செஸ்ஸின் மிகவும் முக்கியமானவர் என்றால் அது ராஜா தான். ஏனென்றால் இங்கு அனைவருமே ராஜாவின் உயிருக்காக தான் மற்றவர்கள் போராடுகிறார்கள். ஆனால் ராஜாவால் ஒரே ஒரு கட்டம் மேல் நோக்கியும் அல்லது கீழ் நோக்கியும் அல்லது இருபுற பக்கவாட்டிலும் செல்ல முடியும்.
மேலும் கிரிக்கெட்டில் எப்படி ஸ்லிப் கவர், எக்ஸ்ட்ரா கவர் என்று சொல்கிறார்களோ அதை போல் செஸ்ஸிலும் கீழே உள்ள கட்டங்களை ABCD என H வரை சொல்வார்கள். இதே போன்று பக்க வட்டத்தில் உள்ள கட்டங்களை ஒன்றிலிருந்து எட்டு வரை சொல்வார்கள். அதனை வைத்து காய் நகர்த்தும்போது A1:A3 என குறிப்பிட்டு சொல்வார்கள். இதன் மூலம் காய் எங்கிருந்து எந்த கட்டத்திற்கு செல்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.