For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செஸ்: அமெரிக்க வீரர் அட்டூழியம்.. குகேஷின் காயை ரசிகர்களிடம் தூக்கி எறிந்ததால் சர்ச்சை- வீடியோ

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செக்மேட் என்ற செஸ் போட்டியில் இந்திய அணியை ஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் அமெரிக்க அணி வீழ்த்திருக்கிறது. அரளின்டன் பகுதியில் நடைபெற்ற இந்த தொடரில் இந்திய வீரர்கள் சோபிக்க தவறினார்கள்.

மின்னல் வேகத்தில் நடைபெறும் பிலிட்ஸ் வகை செஸ் போட்டியில் காய்களை யோசிக்காமல் அடுத்தடுத்து நகர்த்த வேண்டும். இதில் வீரர்களின் மூளை கணினியை விட வேகமாக செயல்படும். கண் இமைக்கும் நேரத்தில் காய்களை நகர்த்தும்போது பல தவறுகள் இதில் நடக்கும்.

Chess

இந்த நிலையில் உலக செஸ் சாம்பியன் ஆன குகேஷ் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிக்காரு நாக்கமுரா என்ற வீரரை எதிர்கொண்டார். இதில் இரண்டு வீரர்களும் காய்களின் மின்னல் வேகத்தில் நகர்த்த குகேஷ் ஒரு சிறு தவறு செய்து தோல்வியை தழுவினார்.

அப்போது வெற்றி பெற்ற ஹிக்காரு நாக்கமுரா, திடீரென்று குகேஷின் அரசன் காயை தூக்கி அங்கு போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களிடம் எறிந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். செஸ் போட்டியில் இதுபோல் கோபத்தை வெளிப்படுத்தக் கூடாது என்றும் ஹிக்காமுரு செய்தது மரியாதை குறைவான செயல் என்றும் பலரும் விமர்சித்து இருக்கிறார்கள்.

ஹிக்காமுருவின் இந்த செயலை குகேஷ் கண்டுகொள்ளாமல் மரியாதை அளிக்கும் விதமாக சிரித்துக் கொண்டே நகர்ந்து வந்து விட்டார். இதன் மூலம் 19 வயதான முகேஷ் தன்னுடைய முதிர்ச்சி தன்மையை காட்டி இருப்பதாக ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

இந்தப் போட்டியில் குகேஷ் மட்டுமல்லாமல் அர்ஜுன் எரிகாசி, திவ்யா தேஷ்முக், சாகர் ஷா உள்ளிட்ட வீரர்களும் தோல்வியை தழுவினர்.இதேபோன்று நார்வே செஸ் போட்டியில் குக்கேஷிடம் தோல்வியை தழுவிய போது நார்வே வீரர் கார்ல்சன் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி மேசையை தட்டி சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, October 5, 2025, 23:06 [IST]
Other articles published on Oct 5, 2025
English summary
Chess- Gukesh lost to Hikaru as He throws chess piece to crowd led to controversy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+