For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செஸ் ஒலிம்பியாட்: ஒரு செஸ் போர்ட் விலை ரூ.30,000.. தலைசுற்ற வைக்கும் எண்ணிக்கை.. அப்படி என்ன ஸ்பெஷல்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பயன்படுத்தப்படும் செஸ் போர்ட்-ன் விலை ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

நேற்று தொடங்கிய ஆட்டங்கள், ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 செஸ் ஒலிம்பியாட் போட்டி

செஸ் ஒலிம்பியாட் போட்டி

இந்த போட்டி ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சுற்று என்ற கணக்கில் மொத்தமாக 11 சுற்றுகளாக நடைபெறவுள்ளன. இதற்காக 189 நாடுகளில் இருந்து சுமார் 2000 பேர் கலந்துக்கொண்டுள்ளனர். சுமார் 2000 தங்கும் அறைகள், உணவு, போக்குவரத்து என வியப்பூட்டும் அளவிற்கு ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளன.

புது ஆச்சரியம்

புது ஆச்சரியம்

இந்நிலையில் இந்த போட்டியில் பயன்படுத்தப்படும் செஸ் போர்டின் விலை மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பயன்படுத்தப்படும் ஒரு செஸ் பலகையின் விலை ரூ.30,000 ஆயிரம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 740 பலகை என ரூ. 2 கோடியே 22 லட்சம் செலவளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

FIDE அறிவுறுத்தல்

FIDE அறிவுறுத்தல்

நெதர்லாந்தில் தயாரிக்கப்படும் இந்த செஸ் பலகையில் ஹை டெக் டிஜிட்டல் வசதி கொண்டவை ஆகும். எனவே இதை தான் பயன்படுத்த வேண்டும் என சர்வதேச செஸ் சமேளனம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அங்கிருந்து தமிழக அரசு இறக்குமதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

என்ன ஸ்பெஷல்

என்ன ஸ்பெஷல்

இந்த செஸ் போர்டிற்கும் - டைமிங் கருவிக்கும் ஒரு கேபிள் இணைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் வீரர் எந்த காயை நகர்த்துகிறார் என்பது டிஜிட்டல் முறையில் மொபைல் ஆஃப்-ல் காண்பிக்கும். இதனை அங்குள்ள திரையின் மூலம் நடுவருக்கு மட்டுமின்றி ஆன்லைனில் ரசிகர்களுக்கும் நேரலையாகவே தெரியும். இதுவே இதன் சிறப்பம்சமாகும்.

Story first published: Saturday, July 30, 2022, 20:54 [IST]
Other articles published on Jul 30, 2022
English summary
Chess Boards Prices and features that using in Chess Olympiad 2022 ( செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் ) செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பயன்படுத்தப்படும் செஸ் போர்ட்-ன் விலை ரசிகர்களுக்கு ஆச்சியத்தை கொடுத்துள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+