Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா.. தெறிக்கவிட்ட லிடியன் நாதஸ்வரம் இசை.. உற்சாகத்தில் மிதந்த அயல்நாட்டவர்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் லிடியன் நாதஸ்வரம் நடத்திய இசை நிகழ்ச்சி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

சென்னை நேர் உள் அரங்கத்தில் நடைபெற்று வரும் தொடக்கவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

தொடக்க நிகழ்ச்சி

தொடக்க நிகழ்ச்சி

தொடக்க விழாவின் முதல் நிகழ்ச்சியாக மணல் ஓவியம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்பின்னர் இந்த போட்டியில் பங்குபெற வந்த அனைத்து நாட்டினத்தவரும் தங்களது தேசியக்கொடியை ஏந்திக்கொண்டு கம்பீர அணி வகுப்பு நடத்தினர். தொடர்ந்து இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக நடன நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடைபெற்றன.

லிடியன் கச்சேரி

லிடியன் கச்சேரி

இந்நிலையில் இன்றைய விழாவில் லிடியன் நாதஸ்வரம் நடத்திய இசைக்கச்சேரி மட்டும் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முதலில் தனக்கே உரிய பாணியில் வேகமாக பியானோவை இசைத்த லிடியன், பின்னர் தனது கண்களை மூடிக்கொண்டு ஒரே நேரத்தில் இரண்டு கைகளில் மிகவேகமாக இசைத்து அசத்தினார்.

ஹாலிவுட் தீம் மியூசிக்

ஹாலிவுட் தீம் மியூசிக்

இதுமட்டுமல்லாமல் ஹாலிவுட் தீம் இசைகளும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் ஒலித்தது. ஹாரி பாட்டர் மற்றும் மிஷன் இம்பாசிபல் போன்ற உலக புகழ்பெற்ற இரண்டு தீம் மியூசிக்குகளை இரண்டு பியானோக்களில் ஒரே நேரத்தில் இசைத்து அசத்தினார். மேலும் மிஸ்டர் பீன், பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் தீம் மியூசிக்களும் இசைத்து அனைவரையும் ரசிக்க வைத்தார்.

மகிழ்ச்சியில் பொங்கிய ரசிகர்

மகிழ்ச்சியில் பொங்கிய ரசிகர்

லிடியனின் இசையை அனைவரும் ரசித்து பார்க்க, ஒரே ஒரு அயல்நாட்டவர் மட்டும் துள்ளி குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு முறையும் லிடியன் வேகமாக இசைக்கும் போதெல்லாம், அவர், தானே இசைப்பது போன்று மகிழ்ந்தது சுவாரஸ்யமாக இருந்தது.

Story first published: Friday, July 29, 2022, 0:19 [IST]
Other articles published on Jul 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+