Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ப்பா..அத எதிர்பார்க்கவே இல்ல” செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. தமிழகத்தை புகழ்ந்து தள்ளிய ஸ்பெயின் வீரர்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சென்னையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்த்த ஸ்பெயினின் முன்னணி செஸ் வீரர் பாராட்டி தள்ளியுள்ளார்.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதல் முறையாக இந்தியாவில், சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டி நாளை ( ஜூலை 28) முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை பிரமாண்ட முறையில் நடைபெறவுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி

செஸ் ஒலிம்பியாட் போட்டி

நாளை இரவு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் தொடக்கவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார். இதற்காக உலகில் உள்ள 180 நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்குபெறவுள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று முதல் சென்னைக்கு வரத்தொடங்கியுள்ளனர்.

 வீரர்கள் ஆச்சரியம்

வீரர்கள் ஆச்சரியம்

இந்நிலையில் சென்னையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்த்து அவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். ஸ்பெயினின் கிராண்ட் மாஸ்டாராக இருப்பவர் ஃப்ரான்சிஸ்கோ வல்லேஜோ போன்ஸ். இன்று காலை சென்னை வந்தடைந்த அவர், செஸ் ஒலிம்பியாட் அரங்கம் மற்றும், தங்கும் வசதிகள் குறித்து பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

ட்விட்டர் பதிவுகள்

ட்விட்டர் பதிவுகள்

அதில், செஸ் ஒலிம்பியாட்டிற்காக இன்று காலை 5 மணிக்கு சென்னைக்கு வந்தேன். இதுவரை 9 செஸ் ஒலிம்பியாட்களில் பங்கேற்றுள்ளேன். ஆனால் இதுபோன்ற ஒரு சிறந்த விளையாட்டு அரங்கத்தை உலகில் நான் எங்குமே பார்த்ததில்லை. எங்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்துமே அற்புதமாக உள்ளன.

தங்கும் அறை

தங்கும் அறை

குறிப்பாக எங்களுக்கான ஹோட்டல்கள், அரங்கத்தில் இருந்து மிக அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகவும் அழகான வரவேற்புகள். இது போன்ற ஒரு சூழலை நான் எங்குமே பார்த்ததில்லை. குறைக்கூற எதுவுமே இல்லை என புகழ்ந்து தள்ளியுள்ளார்.

Story first published: Wednesday, July 27, 2022, 10:53 [IST]
Other articles published on Jul 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+