For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செஸ் ஒலிம்பியாட்டில் மேஜிக்..தானே நகரும் காய்கள்.. வீரர்களுக்கு தமிழக அரசு கொடுத்த பரிசு..வீடியோ இதோ

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழக அரசு செய்துள்ள ஏற்பாடுகள், காண்போரை வியக்க வைத்துள்ளது.

3 மாத இடைவெளியில் எப்படி இவ்வளவு விஷயங்களை சிறப்பாக செய்ய முடியும் என்று அளவுக்கு உலகமே வியந்து பார்த்து வருகிறது.

அந்த அளவுக்கு அதிகாரிகள் சிறப்பான பணியை மேற்கொண்டுள்ளனர். இதே போன்று செஸ் ஒலிம்பியாட் போட்டியை வைத்து சுற்றுலா துறையை ஊக்கப்படுத்தும் நிகழ்வும் நடைபெறுகிறது.

பரிசு பை

பரிசு பை

செஸ் ஒலிம்பியாட் தொடரில் சுமார் 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் 186 நாகளில இருந்து பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசு பரிசு பெட்டகம் ஒன்றை வழங்கியுள்ளது. அந்த பரிசு பையில், மாமல்லப்புரம் கோயிலின் தோற்றத்தை பிரதிபலிக்கும் அழகான நினைவுச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலா இடங்கள்

மேலும், தமிழகத்தில் உள்ள சுற்றுலாத்தளங்கள் அடங்கிய புகைப்படம் ஆல்பம் ஒன்றும் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் தஞ்சை பெரிய கோயில், ஊட்டி தலை ரயில், மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் குறித்த பெருமைகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் இடம்பெற்றுள்ளது. இதில் தமிழ்நாட்டின் வரலாறு, பெருமைகள் குறித்தும் இடம்பெற்றுள்ளது.

டிஜிட்டல் போர்ட்

டிஜிட்டல் போர்ட்

இதே போன்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வரவழைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்ட் ஒன்றின் விலை 30 ஆயிரம் ரூபாயாகும். இதில் வீரர்கள் நகர்த்தும் காய்களின் தகவல் அனைத்தும் ஆப் மூலம் சேகரித்து வைத்து கொள்ளப்படும். இதில், டிஜிட்டல் டைம் பார்க்கும் மற்றும் நேரத்தை கணக்கிடவும் வசதி உள்ளது.

மேஜிக் செஸ் போர்ட்

இதனிடையே செஸ் ஒலிம்பியாட்டில் அனைவரின் கவனத்தையும் தானியங்கி செஸ் போர்ட் ஈர்த்துள்ளது. இதில் Artificial intelligence மூலம் தானே காய்கள் காந்த சக்தியால் நகர்த்தப்படுகிறது. இதனால் வீரர்கள் யாரும் இல்லாமல் காய்கள் தன்னால் நகர்த்தப்படும் மேஜிக் நடைபெறுகிறது. இதனை பல்வேறு வீரர்களும் ஆர்வத்துடன் கண்டு களிக்கின்றனர்.

Story first published: Saturday, July 30, 2022, 20:49 [IST]
Other articles published on Jul 30, 2022
English summary
Chess Olympiad 2022 – TN Kits for Players and Magic chess board செஸ் ஒலிம்பியாட்டில் மேஜிக்..தானே நகரும் காய்கள்.. வீரர்களுக்கு தமிழக அரசு கொடுத்த பரிசு..வீடியோ இதோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+