
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்
செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து நாடு முழுவதும் பிரபலப்படுத்தும் வகையில் ஜோதி ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்காக கடந்த ஜூன் 19ம் தேதியன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார். 40 நாட்களில் இந்தியாவின் 75 நகரங்களில் வலம் வந்த அந்த ஜோதி இன்று சென்னை வந்து சேர்ந்தது.

சென்னையில் ஜோதி
இதனையடுத்து இன்று சென்னை நகரத்தில் ஜோதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. மாநிலக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்திடம் வழங்கினார். இதன் பின்னர் ஜோதி ஓட்டத்தை அமைச்சர்கள் மெய்யநாதன், சேகர்பாபு, மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

முக்கிய நகரங்களில் வலம்
காமராஜர் சாலை, அண்ணா சாலை, ராஜாஜி சாலை, செண்ட்ரல் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் வலம் வரும் ஜோதி, நேரு உள் விளையாட்டு அரங்கம் நோக்கி கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அலங்கரிக்கப்பட்ட மேடையில் வைக்கப்படும், ஜோதியை நாளை பிரதமர் மோடி ஏற்றிவைத்து செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி வைக்கிறார்.

போட்டி விவரம்
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நாளை இரவு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதனையடுத்து ஜுலை 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மொத்தம் 11 சுற்றுகளாக போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியா சார்பில் 6 அணிகள் பங்கு பெறுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











