chess olympiad 2024 - இந்திய அணி 2 பிரிவில் தங்கம் வென்று சாதனை.. குகேஷ், பிரக்ஞானந்தா குழு அசத்தல்
ஹங்கேரி : 45 வது செஸ் ஒலிம்பிக் போட்டி ஹங்கேரி உள்ள புத்தபெஸ்ட் நகரில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் நடைபெற்ற வருகிறது. ஓபன் பிரிவில் 975 போட்டியாளர்களும், மகளிர் பிரிவில் 909 போட்டியாளர்களும் பங்கு பெற்று இருக்கிறார்கள். மொத்தமாக 1884 போட்டியாளர்கள் இந்த தொடரில் பங்கு பெற்றிருக்கிறார்கள்.
ஓபன் பிரிவில் 197 அணிகளும் மகளிர் பிரிவில் 183 அணிகளும் விளையாடியது. இதில் 11-வது சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா தங்கம் வெல்ல வேண்டும் என்றால் ஸ்லோவேனியா நாட்டிற்கு எதிராக டிரா செய்தாலே போதும் என்ற நிலை இருந்தது.

ஆனால் இந்திய அணி வீரர்கள் அபாரமாக விளையாடி அசத்தினர். தமிழகத்தை சேர்ந்த குகேஷ், பிராக்யானந்தா மற்றும் அர்ஜுன் ஆகியோர் தாங்கள் விளையாடிய போட்டிகளில் வெற்றியை பெற்றனர். அதேபோன்று மற்றொரு இந்திய வீரரான விவித், போட்டியில் டிரா செய்தார். இதன் மூலம் 11 ஆவது பிரிவில் மூன்று புள்ளி ஐந்து- ஜீரோ புள்ளி ஐந்து என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் 21/ 22 போட்டி புள்ளிகளை பெற்று இந்தியா தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இதே போன்று, மகளிர் பிரிவில் இந்திய குழு அஸர்பைஜான் அணியை எதிர்கொண்டது. இதில் ஹரிக்கா,திவ்யா, வனிதா ஆகியோர் வெற்றியைப் பெற வைஷாலி ட்ரா பெற்றார். இதன் மூலம் மகளிர் பிரிவில் அசர்பைஜான் அணியை 3.5க்கு 0.5 என்ற கணக்கில் இந்தியா வெற்றியை பெற்றது.
இதன் மூலம் மகளிர் பிரிவில் 19/ 22 போட்டி புள்ளிகளை கைப்பற்றி இந்திய மகளிர் அணியும் தங்க பதக்கத்தை வென்றது. இதன் மூலம் செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்தியா ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது. இதேபோன்று இந்திய வீரர்கள் முகேஷ், அர்ஜுன் திவ்யா மற்றும் வந்திகா ஆகியோர் தனி நபர் பிரிவில் தங்கத்தை கைப்பற்றினர்.
கடந்த 44 வது செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடைபெற்ற போது இந்தியா அதில் ஓபன் பிரிவில் வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது. சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் மூலம் பல்வேறு விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் கிடைத்தது. மேலும் வீரர்களுக்கும் சென்னையில் நடைபெற்ற தொடர் புதிய உத்வேகத்தை கொடுத்த நிலையில், தற்போது செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா சாதனை படைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications