Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்ட மானுவெல் ஆரோன்.. யார் அந்த ஆரோன்.. செஸ் உலகில் தவிர்க்க முடியாத பெயர்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்சசியில் முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கடி பயன்படுத்திய பெயர் தான் மானுவெல் ஆரோன்.

தமிழகத்தின் செஸ் பிதாமகன் என்றால், அது விஸ்வநாதன் ஆனந்த் தான். ஆனால், அவரது பெயரை சொல்வதற்கு முன்பே முதலமைச்சர் ஸ்டாலின் மானுவெல் ஆரோனை பற்றி பேசினார்.

அப்படி என்ன சாதனையை ஆரோன் பயன்படுத்தினார். அவர் என்பதை தற்போது காணலாம்.

யார் மானுவெல் ஆரோன்?

யார் மானுவெல் ஆரோன்?

தமிழகத்தில் செஸ் வீரர் என்றால் அது 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற விஸ்வநாதன் ஆனந்தனையே சேரும். ஆனால், அந்த விஸ்வநாதன் ஆனந்தனையே உருவாக்கிய பெருமை இந்த மானுவெல் ஆரோனையே சேரும். ஆம், விஸ்வநாதனின் ஆரம்ப காலத்தின் செஸ் பயிற்சியாளர் தான் மானுவெல். ஏ.ஆர். ரஹ்மான் செஸ் பாடலில் கூட மானுவெல் ஆரோன் இடம்பெற்று இருப்பார்.

பர்மா தமிழர்

பர்மா தமிழர்

இந்தியாவுக்கும், செஸ்க்கும் பிரிக்க முடியாத ஒரு தொடர்பு இருந்த வேரலாற்றில் இருந்த போதும், காலப்போக்கில் ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகள் செஸ் உலகில் கோலொச்சியது. அப்போது பெயர் அளவுக்கு தான் இந்தியாவில் செஸ் சம்மேளனம் செயல்பட்டது. அந்த காலத்தில் தான் பர்மாவிலிருந்து தமிழகம் வந்து குடியேறியது மானுவெல் ஆரோனின் குடும்பம்.

சர்வதேச மாஸ்டர்ஸ் பட்டம்

சர்வதேச மாஸ்டர்ஸ் பட்டம்

சிறு வயதிலிருந்து செஸ் மீது ஆர்வம் கொண்ட ஆரோன், 9 முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டத்தையும், 1961ஆம் ஆண்டு சர்வதேச செஸ் மாஸ்டர் தொடரில் வெற்றியையும் மானுவெல் ஆரோன் பெற்றார்.இதனைத் தொடர்ந்து 1970ஆம் ஆண்டுகளில் இந்தோ, ரஷ்ய கலாச்சார மையத்தில், ரண்ய மொழி பயின்ற ஆரோனை, செஸ் கிளப் அமைக்க கோரி, அந்த மைய நிர்வாகிகள் அறிவுறுத்தினர்.

கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கியவர்

கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கியவர்

அதன் பிறகு தான், ரஷ்ய வீரரும், உலக சாம்பியனான தால் பெயரில், தால் செஸ் கிளப் என்ற பெயரில் ஆரோன் உருவாககினார். இந்த பயிற்சி மையத்தில் பட்டை தீட்டப்பட்டவர் தான் நமது விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட சாம்பியன்கள். செஸ் பற்றி விழிப்புணர்வு இல்லாத போதே, பயிற்சியை பல வீரர்களுக்கு மானுவெல் வழங்கினார். மானுவெல் போட்ட விதை தான், இன்று தமிழகத்தில் மட்டும் 26 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர்.

Story first published: Thursday, July 28, 2022, 22:10 [IST]
Other articles published on Jul 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+