செஸ் ஒலிம்பியாட்.. தமிழக வீரர் பிரக்ஞானந்தா அபாரம்.. சுவிஸ் கிராண்ட் மாஸ்டரை ஓட விட்டு அசத்தல்
சென்னை: செஸ் ஒலிம்பியாட் 2022ஆம் ஆண்டு தொடரின் 3வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது.
இந்த தொடரில் இந்திய அணி மகளிர் பிரிவில் முதல் தோல்வியையும், இந்திய ஆடவர் பிரிவில் முதல் டிராவையும் கண்டது.
ஆனால், இந்திய அணியின் பி பிரிவில் களமிறங்கிய பிரக்ஞானந்தா தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தார்.

முதலில் பதுங்கல்
சுவிட்சர்லாந்து வீரர் யானிக்கை பிராக்ஞானந்தா எதிர்கொண்டார். இந்தப் போட்டி நினைத்ததை விட கடும் சவாலாக பிரக்ஞானந்தாவுக்கு அமைந்தது. தொடக்கம் முதலே பிரக்ஞானந்தாவுக்கு சுவிஸ் வீரர் கடும் நெருக்கடி அளித்தார். பிரக்ஞானந்தாவின் இரண்ட பிஷப்கள், இரண்டு யானை, ஒரு குதிரை என முக்கிய காய்களை சுவிஸ் வீரர் வெட்டினார்.

பிரக்ஞானந்தா அபாரம்
புலியை போல் பதுங்கி இருந்த பிரக்ஞானந்தா, பின்னர் தனது ஆட்டத்தை காண்பிக்க தொடங்கினார். இதனால் ஆட்டம் சூடு பிடித்தது. தனது குயினை மட்டும் வைத்து சுவிஸ் வீரருக்கு தண்ணீர் காட்டினார் பிரக்ஞானந்தா. இதற்கிடையில் சுவிஸ் வீரர் வைத்த இரண்ட செக்களையும் தகர்த்த பிரக்ஞானந்தா, 67வது நகரில் சுவிஸ் வீரரின் ரைஜாவுக்கு தனத ராணி மூலம் செக் மேட் வைத்தார்.

முதல் தோல்வி
இதில் கடுமையாக சிக்கி கொண்ட சுவிஸ் வீரர் யானிக் தனது தோல்வியை ஒப்பு கொண்டார். இந்திய பி பிரிவில் சத்வாணி, குகேஷ், சரின் என மற்ற வீரர்களும் வெற்றி பெற 4க்கு0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை இந்தியா வீழ்த்தியது. இந்திய மகளிர் சி அணி வீராங்கனை வர்ஷினி ஷாகிதி, 46வது நகர்த்தலுக்கு பிறகு ஆஸ்திரிய வீராங்கனை ஸ்வாலா நிகோலாவிடம் தோல்வியை தழுவினார்.

தமிழக வீரர் வெற்றி
இந்திய ஏ அணியில் மூன்றாவது சுற்றில் விதித் குஜராத்தி, சசி கிருஷ்ணன் ஆகியோர் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதே போன்று இந்திய சி அணியில் தமிழக வீரர் சேதுராமன் வெற்றி பெற்றார். இதனிடையே 3வது சுற்றில் இத்தாலி வீரர் டேனில் உடன் போட்டியிட்ட நட்சத்திர வீரர் கார்ல்சன் 56வது நகர்வில் சமன் செய்தார்.


Click it and Unblock the Notifications