For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செஸ் ஒலிம்பியாட் 6வது சுற்று – தோல்வியை தழுவியதால் பிரக்ஞானந்தா இல்லை.. 3 தோல்விகளை தழுவிய இந்தியா

சென்னை: செஸ் ஒலிம்பியாட் 2022ஆம் ஆண்டு தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

ஓபன் பிரிவு மற்றும் மகளிர் அணி என மொத்தம் 6 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கிறது. மொத்தம் 11 சுற்றுகள் நடைபெறும் இந்த தொடரில் தற்போது 6 சுற்றுகள் முடிவடைந்துள்ளன.

இதில் இந்திய பி அணியில் நேற்று தமிழக வீரர் பிரக்ஞானந்தா 5வது சுற்றில் தோல்வியை தழுவியதால், இன்றைய சுற்றில் பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டு இருந்தது.

Chess Olympiad round 6 – Indian mens team faces 3 loss

இந்திய பி அணி, இன்று ஆர்மேனியாவை எதிர்கொண்டது. இதில் குகேஷ், கேப்ரியலை வீழ்த்தினார். இதே போன்று சிரின் நிஹல் ஆடிய ஆட்டம் டிராவை கண்டது. மற்றொரு போட்டியாளர் அதிபன் தோல்வியை தழுவ,சத்வானி தோல்வியை தழுவினார். ஆர்மேனியா அணி இரண்டரை புள்ளிகள் பெற, இந்திய பி அணி ஒன்றை புள்ளிகள் மட்டுமே பெற்றது

இதே போன்று இந்திய ஏ அணி உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இதில் ஹரிகிருஷ்ணா வெற்றி பெற, குஜராத்தி மற்றும் அர்ஜூன் ஆகியோர் டிராவை சந்தித்துள்ளனர். இதே போன்று கடைசி ஆட்டத்தில் ஷசிகரன் தோல்வியை தழுவியுள்ளார். 6வது சுற்றில் இந்திய சி அணி தமிழக வீரர் சேதுராமன், குப்தா, அபிமன்யூ ஆகியோர் வெற்றி பெற, கங்குலி சமன் செய்தார்.

ஓபன் பிரிவின் முடிவில் இந்திய ஏ அணி முதலிடத்தை பிடித்துள்ளது. இதே போன்று மகளிர் பிரிவில் இந்திய ஏ அணியில் விளையாடிய தமிழக வீராங்கனை வைசாலி வெற்றி பெற்றார். மகளிர் பிரிவிலும் இந்திய ஏ அணி முதலிடத்தில் உள்ளது.

Story first published: Wednesday, August 10, 2022, 10:32 [IST]
Other articles published on Aug 10, 2022
English summary
Chess Olympiad round 6 – Indian mens team faces 3 loss செஸ் ஒலிம்பியாட் 6வது சுற்று – தோல்வியை தழுவியதால் பிரக்ஞானந்தா இல்லை.. 3 தோல்விகளை தழுவிய இந்தியா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+