Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செஸ் ஒலிம்பியாட் - அமெரிக்காவை நசுக்கிய சென்னை பசங்க..! குகேஷ்க்கு 8வது வெற்றி, பிரக்ஞானந்தா டிரா

சென்னை : 44வது சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நம்பர் 1 அணியான அமெரிக்காவை , இந்திய பி அணி தோற்கடித்தது.

Recommended Video

IND vs WI 4th T20 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி *Cricket

இந்திய பி அணி தனது 8வது சுற்றில் அமெரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் முதல் ஆட்டத்தில் தமிழக வீரர் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஃபெபியானோவை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ், அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தி, அமெரிக்க வீரரை திணறிடித்தார்.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

சுமார் 45வது நகர்ததலில் அமெரிக்க வீரரின் ராஜாவுக்கு கட்டம் கட்டி காய்களை குகன் நகர்த்த, இறுதியில் ஃபெபியானோ தோல்வியை ஒப்பு கொண்டார். இதன் மூலம் தொடர்ந்து 8வது முறையாக குகன் வெற்றி பெற்றுள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய மற்றொரு தமிழக வீரர் பிரக்ஞானந்தா, அமெரிக்க வீரர் வீஸ்லியை எதிர்கொண்டார்.

பிரக்ஞானந்தா டிரா

பிரக்ஞானந்தா டிரா

இரு வீரர்களுமே ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் விளையாடினர். இதனால் 33வது நகர்த்தலிலேயே இரு வீரர்களும் வெற்றி, தோல்வியின்றி சமனில் முடித்து கொள்வதாக ஒப்பு கொண்டனர். இதே போன்று பி அணியின் மற்றொரு வீரரான சத்வீக் வெற்றி பெற, சரின் நிஹல் டிரா செய்தார். இதனையடுத்து இந்திய பி அணி 3க்கு1 என்ற கணககில் அமெரிக்காவை வீழ்த்தியது.

சேதுராமன் டிரா

சேதுராமன் டிரா

இதே போன்று இந்திய ஏ அணி அர்மேனியாவை எதிகொண்டது. இதில் இந்திய வீரர்கள் 3 பேர் டிரா செய்ய, ஹரி கிருஷ்ணா தோல்வியை தழுவினார். இதன் மூலம் ஆர்மேனியா இரண்டரை ஒன்றை என்ற கணக்கில் வென்றது. இந்திய சி அணி பெரு அணியுடன் தோல்வியை தழுவியது.இதில் தமிழக வீரர் சேதுராமன் சமன் செய்தார்.

முதல் தோல்வி

முதல் தோல்வி

மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி, உக்ரைன் அணி மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதில் தமிழக வீராங்கனை வைசாலி மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. போலாந்துடன் விளையாடிய இந்திய சி அணியில் விளையாடிய தமிழக வீராங்கனை நந்திதா முதல் தோல்வியை தழுவினார். குரோஷியாவை எதிர்கொண்ட இந்திய பி அணி வெற்றி பெற்றது.

Story first published: Wednesday, August 10, 2022, 10:32 [IST]
Other articles published on Aug 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+