Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனப்பாகுபாடே இல்ல.. தமிழர்களின் வரவேற்பால் வியந்த கறுப்பினத்தவர்கள்.. செஸ் ஒலிம்பியாட்-ல் நெகிழ்ச்சி

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வரும் அயல்நாட்டவர்களை வரவேற்பதில் நிற பாகுபாடு பார்க்கப்படுகிறதா என்ற கேள்விக்கு தமிழக மக்கள் தரமான பதிலடி கொடுத்து வருகின்றனர்.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வரை சென்னையில் மாமல்லபுரத்தில் கோலகலமாக நடைபெறவுள்ளது.

இதற்காக இன்று மாலை 7 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

செஸ் ஒலிம்பியாட் 2022

செஸ் ஒலிம்பியாட் 2022

இந்த போட்டியில் 189 நாடுகளில் இருந்து 2000க்கும் வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொள்ளவுள்ளனர். அவர்கள் அனைவரும் நேற்று முதல் சென்னைக்கு வருகை தந்து வருகின்றனர். அவர்களை வரவேற்று, ஹோட்டல் அறைகளுக்கு அழைத்து செல்வதற்காக சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. இந்த ஏற்பாடுகளுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

குவியும் பாராட்டு

குவியும் பாராட்டு

சென்னையில் கிடைத்ததை போன்ற வரவேற்பு மற்றும் ஏற்பாடுகள் போல் இதுவரை எங்குமே பார்த்ததில்லை. இதுவரை நடந்ததிலேயே இதுதான் சிறந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியாக இருக்கும் என அயல்நாட்டு வீரர்கள் ட்விட்டரில் பாராட்டி வருகின்றனர். இதே போன்று ஹோட்டல் அறைகள் மற்றும் உணவுகள் குறித்தும் பாராட்டுக்கள் குவிகின்றன.

புதிய சர்ச்சை

புதிய சர்ச்சை

இந்நிலையில் திடீர் சர்ச்சை கிளம்பியுள்ளது. அதாவது வெள்ளை இன மக்களுக்கு மட்டும் தான் சிறப்பான வரவேற்புகள் கொடுக்கப்படுகிறதா? நிறப்பாகுபாடு உள்ளதா? என மற்ற நாட்டு ரசிகர்கள் ட்விட்டரில் கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழக ரசிகர்களிடம் இருந்து தரமான பதில்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

உகாண்டா, ஆஃப்ரிக்கா உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் கருப்பின மக்களும் எந்தவித நிறபாகுபாடும் இன்றி மாலை, சால்வைகள் ஆகியவை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்படுகின்றனர். இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு, தமிழகத்தை சேர்ந்தவர்கள் பதில் கொடுத்துள்ளனர். மேலும் அவர்கள் ஹோட்டல் அறைகளில் எந்தவித சிரமும் இன்றி உணவு அருந்தும் புகைப்படங்களும் பகிரப்பட்டு வருகின்றன.

கவலை வேண்டாம்

கவலை வேண்டாம்

மேலும் அதில், "இந்தியா நாட்டில் நிறம், மொழி பாகுபாடு என்ற எந்த பேச்சுக்கும் இடமே இல்லை. இங்கு வரும் மக்களை வேறு எந்தநாட்டில் இல்லாத வகையில் உபசரித்து தான் எங்களுக்கு பழக்கம். உங்கள் நாட்டு வீரர், வீராங்கனைகளை எந்தவித குறையும் இன்றி கவனித்து அனுப்புகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Story first published: Thursday, July 28, 2022, 12:52 [IST]
Other articles published on Jul 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+