Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகின் நம்பர் 1 செஸ் வீரரான கார்ல்சனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!

செஸ் : போலாந்தில் நடைபெற்று வரும் சூப்பர் பெட் ராபிட் மற்றும் பிலிட்ஸ் செஸ் தொடரில் உலகின் நம்பர் ஒன் வீரரான நார்வேவின் கார்ல்சனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தி ஆசத்தி இருக்கிறார்.இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இருவரும் பல பரிட்சை நடத்திய நிலையில் கார்ல்சன் அதிர்ச்சி தோல்வியை தழுவினர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கார்ல்சன் தமது நரம்பு மண்டலம் திடீரென்று சரியாக செயல்படவில்லை. இதனால் தான் தாம் பிரக்ஞானந்தாவிடம் தோற்று விட்டதாக கருத்து தெரிவித்துள்ளார்.

chess - Tamilnadu Player R Praggnanandhaa beat world no 1 Magnus carlsen

இந்த தொடரில் சீனாவை சேர்ந்த வீய் 20.5 புள்ளிகள் உடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் உலகில் முதல் நிலை வீரரான கார்ல்சன் 18 புள்ளிகளுடன் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா 14.5 புள்ளிகளுடன் இருக்கிறார். நான்காம் இடத்தில் இந்திய வீரர் அர்ஜுன் ஏர்காசி 14 புள்ளிகளுடன் உள்ளார்.

எனினும் மற்றொரு தமிழக வீரரான முகேஷ் இன்றைய ஆட்டத்தில் சொதப்பினார். மொத்தமாக அவர் 9.5 புள்ளிகள் தான் பெற்றிருக்கிறார். முகேஷ் உலக சாம்பியன் பட்டத்தை வெல்லும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் தற்போது அவர் தடுமாறி இருப்பது பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த தொடரில் வெற்றி பெறும் வீரருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு கோடியே 46 லட்சம் ரூபாய் பரிசு தொகை கிடைக்கும். இன்னும் 9 சுற்றுகள் எஞ்சியுள்ள நிலையில் சீன வீரர் Wei yi பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் தமிழக வீரர் பிரக்ஞானந்தாவிடம் தோற்ற கார்ல்சன் அடுத்த போட்டியிலே வெற்றியை ருசித்து இருக்கிறார்.

Story first published: Sunday, May 12, 2024, 13:21 [IST]
Other articles published on May 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+