Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு என்ன ஆச்சு? போலாந்தில் போய் இப்படி ஆயிடுச்சே.. ரசிகர்கள் சோகம்

போலாந்தில் நடைபெற்ற செஸ் போட்டி ஒன்றில் நடப்பு உலக சாம்பியன் ஆன தமிழக வீரர் குகேஷ் அதிர்ச்சி தோல்வியை தழுவினார். போலாந்தில் கேட்டவைஸ் என்ற நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் துரித செஸ் பிரிவில் 2021 செஸ் உலகக் கோப்பையை வென்ற போலாந்து வீரர் தூதாவும் நடப்பு உலக சாம்பியன் ஆன குகேஷ் உடன் பலப் பரீட்சை நடத்தினர்.

விரைவாக நடத்தப்படும் பிலிட்ஸ் செஸ் போட்டியில் இரு வீரர்களும் ஆறு கேம் கொண்ட இந்த போட்டியில் விளையாடினர். இந்த தொடரில் முதல் போட்டியில் குகேஷ் அபாரமாக வென்று முன்னிலை பெற்றார்.

GuKesh

எனினும் அதன் பிறகு தூதா தனது கூர்மையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து ஐந்து போட்டிகளில் அதன் பிறகு தூதா தான் வென்றார் .இதில் ஒரு முறை கூட குகேஷால் தோல்வியை தடுக்க முடியவில்லை. இந்த போட்டியின் முடிவில் ஐந்துக்கு ஒன்று என்ற கணக்கில் போலாந்து வீரர் துாதா வெற்றி பெற்றார்.

குகேஷ் சமீப காலமாக பிலிட்ஸ் செஸ் பிரிவிலும் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்று வந்தார். இதனால் இந்த போட்டியில் நல்ல உத்வேகத்துடன் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் களமிறங்கினார். ஆனால் தூதா இதுபோன்ற வேகமாக விளையாடும் செஸ் போட்டிகளில் பயமின்றி காய்களை நகர்த்தி புத்தி கூர்மையுடன் செயல்பட கூடியவர்.

குகேசை விட தூதாவுக்கு தான் இந்த பிரிவில் அனுபவம் அதிகம். அதுவும் சொந்த மண்ணில் நடைபெற்றதால் போட்டிகளில் முக்கியமான கட்டத்தில் குகேஷை வீழ்த்தி தூதா வெற்றி பெற்றார். தூதாவின் அதிவேகம் குகேஷின் ஆட்டப் போக்கை பாதிக்க வைத்து தவறு செய்ய வைத்ததாக செஸ் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு தூதா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் செஸ் போட்டியில் பல்வேறு சரிவை சந்தித்ததாகவும் கூறியிருந்தார். எனினும் செஸ் போட்டியில் மீண்டும் கவனம் செலுத்தி விளையாடி வரும் தூதா குறிப்பிட்ட தகவல்கள் வெற்றிகளை பெற்று வருகிறார்.

Story first published: Thursday, August 7, 2025, 20:06 [IST]
Other articles published on Aug 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+