இன்று நடைபெறும் உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலகின் முதல் நிலை வீரரான கார்ல்சனை எதிர்கொள்கிறார். இறுதி போட்டியில் கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைப்பாரா என்று ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இது குறித்த நேரலை செய்திகளை இங்கு காணுங்கள்.

டை பிரேக்கரின் 2வது சுற்று டிராவில் முடிவடைந்த நிலையில், சாம்பியன் பட்டத்தை வென்றார் மேக்னஸ் கார்ல்சன்
செஸ் உலகக்கோப்பைத் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன் சாதனை
டை பிரேக்கரின் 2வது சுற்று ஆட்டத்திலும் மேக்னஸ் கார்ல்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மறுபக்கம் பிரக்ஞானந்தா ஒவ்வொரு நகர்வுக்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்
டை பிரேக்கர் இரண்டாவது சுற்றில் கறுப்பு நிற காய்களுடன் பிரக்ஞானந்தாவும், வெள்ளை நிற காய்களுடன் மேக்னஸ் கார்ல்சனும் விளையாடி வருகின்றனர்
டை பிரேக்கர் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்த நிலையில், வாழ்வா சாவா ஆட்டத்தில் களமிறங்கியுள்ளார்
பிரக்ஞானந்தா - மேக்னஸ் கார்ல்சன் இடையிலான டை பிரேக்கரின் 2வது சுற்று ஆட்டம் தொடங்கியது
தற்போது முதல் ஆட்டத்தில் கார்ல்சன் வென்ற நிலையில், 2வது ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
முதல் சுற்று ஆட்டத்தில் சிறு தவறு செய்ததால் பிரக்ஞானந்தாவுக்கு சரிவு.. கார்ல்சன் வெற்றி
முதல் சுற்றின் முதல் ஆட்டம் முடிய இன்னும் 5 நிமிடங்களே உள்ளதால், போட்டி டிரைவில் முடிவடைய வாய்ப்பு
18வது நகர்வு முடிவில், பிரக்ஞானந்தா மற்றும் மேன்கஸ் கார்ல்சன் இருவருமே தங்களின் ராணிகளை இழந்துள்ளனர்
டை பிரேக்கர் சுற்றின் முதல் ஆட்டத்தில் 14 நகர்வுகள் முடிவடைந்த நிலையில், இருவரும் தங்களின் பிஷப் (மந்திரி) காயினை இழந்தனர்
செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா - மேக்னஸ் கார்ல்சன் இடையிலான டை பிரேக்கர் ஆட்டம் தொடங்கியது
ராபிட் என மின்னல் வேகத்தில் போட்டியில் கார்ல்சனை மூன்று முறை தொடர்ந்து பிரக்ஞானந்தா தான் வீழ்த்தி இருக்கிறார். மேலும் இந்த தொடரில் பிரக்ஞானந்தா உலகில் இரண்டாவது நிலை வீரரான ஹிக்காரு நக்கமுரா மூன்றாவது வீரரான ஃபேமினோ கருணா ஆகியோர்களை ராபிட் ரவுண்டு முறையில் வீழ்த்தியதால் இந்த தொடரில் பிரக்ஞானந்தா வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.
இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 4:30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை தொலைக்காட்சியில் பார்க்க முடியாது. ஆனால் youtube-யில் FIDE செஸ் youtube சேனலிலும், செஸ் பேஸ் இந்தியா என்ற youtube பக்கத்திலும் நேரலையில் காணலாம்.
இதுவும் சமனில் முடிந்தால் சடன் டெத் என்ற ஒரே ஆட்டத்தில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்று விடுவார்கள் என அறிவிக்கப்படும்.
இதிலும் வெற்றியாளர் யார் என்று தெரியவில்லை என்றால் மூன்றாவது டைபிரேக்கர் வழங்கப்படும். இதில் இரண்டு ஆட்டங்கள் நடைபெறும் ஆனால் இந்தப் போட்டி வெறும் ஐந்து நிமிடம்தான் கால அளவு ஒவ்வொரு நகர்த்தலுக்கும் மூன்று வினாடிகள் கூடுதலாக வழங்கப்படும்.
இரண்டாவது டை பிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்படும். அதில் இரண்டு ஆட்டங்கள் நடைபெறும். இதன் கால அளவு வெறும் 10 நிமிடங்கள்தான்.
முதல் டை பிரேக்கரில் இரண்டு போட்டிகள் நடத்தப்படும்.இதில் 25 நிமிடத்திற்குள் போட்டிகள் நடத்தி முடிக்கப்படும் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் கூடுதலாக பத்து வினாடிகள் அவகாசம் வழங்கப்படும்.
உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்படுகிறது