For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செஸ் உலக கோப்பை- தரவரிசையில் தமிழக வீரர்கள் ஆதிக்கம்.. பிரக்ஞானந்தாவுக்கு பரிசுத் தொகை எவ்வளவு?

பெகு : உலகக் கோப்பை செஸ் தொடரில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெள்ளி பதக்கம் என்று சாதனை படைத்திருக்கிறார். இந்த தொடரில் இறுதிப் போட்டி வரை வந்த இரண்டாவது இந்திய வீரர் என்று பெருமையை பிரக்ஞானந்தா பெற்றிருக்கிறார்.

மேலும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் போட்டியாளராக தகுதி பெறுவதற்கு விளையாடப்படும் கண்டென்டர் தொடரில் பிரக்ஞானந்தா தகுதி பெற்றிருக்கிறார்.

chess world cup 2023 - prize money for Praggnanandhaa and rankings details

அந்த தொடருக்கு விளையாட தகுதி பெற்றுள்ள மூன்றாவது இளம் வீரர் என்ற பெருமையும் பிரக்ஞானந்தாவுக்கு சொந்தமானது. நேற்றைய ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றியின் அருகே இருந்த நிலையில் சிறு தவறின் மூலம் போட்டியில் வெல்லும் வாய்ப்பை இழந்தார். மேலும் கார்ல்சனும் முதல் போட்டியை வென்ற பிறகு இரண்டாவது போட்டியில் டிரா செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடி பிரக்யானந்தாவை 1.5- 0.5 ஆகிய புள்ளி கணக்கில் டை பிரேக்கரில் வீழ்த்தினார்.

இந்த நிலையில் பிரக்ஞானந்தாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது மட்டுமல்லாமல் 80 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 66 லட்சத்து 13 ஆயிரத்து 444 ஆகும். மேலும் சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு 90 லட்சத்து 93 ஆயிரத்து 51 ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொடரில் பிரக்ஞானந்தா உலகின் இரண்டாம் நிலை வீரரான நாக்கமுறா மற்றும் மூன்றாம் நிலை வீரரான கரோனா ஆகியோரை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இந்த நிலையில் பிரக்ஞானந்தாவின் தரவரிசை புள்ளி பட்டியல் முன்னேற்றம் அடைந்துள்ளது. அவர் 20 புள்ளிகளை அதிகம் பெற்று தற்போது 2727 புள்ளிகளுடன் இருக்கிறார். மேலும் தரவரிசை பட்டியலில் ஒன்பது இடங்கள் முன்னேறி தற்போது 20-ஆம் இடத்தில் இருக்கிறார். இவருக்கு முன்பு மற்றொரு தமிழக வீரரான குகேஷ் எட்டாவது இடத்திலும் விஸ்வநாதன் ஆனந்த் ஒன்பதாவது இடத்திலும் உள்ளனர்.இந்தப் பட்டியலில் மேக்னஸ் கார்ல்சன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

Story first published: Friday, August 25, 2023, 12:34 [IST]
Other articles published on Aug 25, 2023
English summary
chess world cup 2023 - prize money for Praggnanandhaa and rankings details செஸ் உலக கோப்பை- தரவரிசையில் தமிழக வீரர்கள் ஆதிக்கம்.. பிரக்ஞானந்தாவுக்கு பரிசுத் தொகை எவ்வளவு?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+