பெகு : உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்படுகிறது.இதில் 18 வயது நிரம்பிய இந்தியாவின் நட்சத்திர வீரர் பிரக்ஞானந்தாவும் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற நார்வேரின் மேக்னஸ் கார்ல்சனும் பல பரிட்சை நடத்த உள்ளனர்.
இறுதிப் போட்டியில் முதல் இரண்டு சுற்றுகளும் டிராவில் முடிவடைந்த நிலையில் இன்று டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்படுகிறது. செஸ் போட்டியில் மிகவும் குறுகிய கால போட்டியாக கருதப்படும் ராபிட் செஸ் முறை வெற்றியாளரை தீர்மானிக்க கடைபிடிக்கப்படுகிறது.

முதல் டை பிரேக்கரில் இரண்டு போட்டிகள் நடத்தப்படும்.இதில் 25 நிமிடத்திற்குள் போட்டிகள் நடத்தி முடிக்கப்படும் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் கூடுதலாக பத்து வினாடிகள் அவகாசம் வழங்கப்படும். இதில் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படவில்லை என்றால் இரண்டாவது டை பிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்படும். அதில் இரண்டு ஆட்டங்கள் நடைபெறும். இதன் கால அளவு வெறும் 10 நிமிடங்கள்தான்.
ஆனால் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் கூடுதலாக பத்து வினாடிகள் வழங்கப்படும். இதிலும் வெற்றியாளர் யார் என்று தெரியவில்லை என்றால் மூன்றாவது டைபிரேக்கர் வழங்கப்படும். இதில் இரண்டு ஆட்டங்கள் நடைபெறும் ஆனால் இந்தப் போட்டி வெறும் ஐந்து நிமிடம்தான் கால அளவு. ஒவ்வொரு நகர்த்தலுக்கும் மூன்று வினாடிகள் கூடுதலாக வழங்கப்படும். இதுவும் சமனில் முடிந்தால் சடன் டெத் என்ற ஒரே ஆட்டத்தில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்று விடுவார்கள் என அறிவிக்கப்படும்.
கிளாசிக்கல் செஸ் வகையில் கார்ல்சன் கை ஓங்கி இருக்கும் ஆனால் ராபிட் என மின்னல் வேகத்தில் போட்டியில் கார்ல்சனை மூன்று முறை தொடர்ந்து பிரக்ஞானந்தா தான் வீழ்த்தி இருக்கிறார். மேலும் இந்த தொடரில் பிரக்ஞானந்தா உலகில் இரண்டாவது நிலை வீரரான ஹிக்காரு நக்கமுரா மூன்றாவது வீரரான ஃபேமினோ கருணா ஆகியோர்களை ராபிட் ரவுண்டு முறையில் வீழ்த்தியதால் இந்த தொடரில் பிரக்ஞானந்தா வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.
இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 4:30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை தொலைக்காட்சியில் பார்க்க முடியாது. ஆனால் youtube-யில் FIDE செஸ் youtube சேனலிலும், செஸ் பேஸ் இந்தியா என்ற youtube பக்கத்திலும் நேரலையில் காணலாம்.