Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செஸ் உலக கோப்பை தொடர் - 30 லட்சத்தை தட்டி சென்ற தமிழக வீரர் குகேஷ்..அரையிறுதி நோக்கி பிரக்ஞானந்தா

பெக்கு: உலகக் கோப்பை செஸ் தொடர் அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த ஜூலை 30ஆம் தேதி தொடங்கி வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் இந்த தொடரில் காலிறுதி சுற்றில் நட்சத்திர வீரர் மேக்னஸ் கார்ல்சனுடன் தமிழக வீரர் குகேஷ் மோதினார்.
இதில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் மேக்னஸ் கார்ல்சன் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி குகேஷுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தினார்.

chess World cup - Tamilnadu Player Praggnanandha eyes for semis as gukesh knocked out

இதன் மூலம் குகேஷ் நேற்று தோல்வியை தழுவினார். இந்த நிலையில் வாழ்வா சாவா ஆட்டத்தில் இன்று குகேஷ் களமிறங்கினார். இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய கார்ல்சனுக்கு குகேஷ் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். எனினும் இந்த போட்டி சமநிலையில் முடிந்தது. இதனால் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கு மேக்னஸ் கார்ல்சன் அரை இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

காலிறுதி வரை வந்துள்ள குகேஷ் இந்திய ரூபாய் மதிப்பில் 30 லட்சம் வென்று நாடு திரும்புகிறார்.இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு வீரர் பிரதானந்தா காலிறுதியில் தெலுங்கானாவை சேர்ந்த அர்ஜுனை எதிர்கொண்டார். இதில் முதல் சுற்றில் பிரகானந்தா தோல்வியை தழுவிய நிலையில் இரண்டாவது சுற்றில் தன்னுடைய மேஜிக்கை நிகழ்த்தி அர்ஜுனை வீழ்த்தினார்.

chess World cup - Tamilnadu Player Praggnanandha eyes for semis as gukesh knocked out

இதன் மூலம் தற்போது ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்த போட்டி உள்ள நிலையில் நாளை வெற்றியாளர்களை தீர்மானிக்கக்கூடிய டைபிரேக் போட்டிகள் நடைபெறுகிறது. இதனிடையே உலகக்கோப்பை செஸ் தொடரில் இந்திய வீரர்கள் நான்கு பேர் காலிறுதிவரை வந்திருப்பது வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்று செஸ் ஜாம்பவான் விஸ்வநாத் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் இந்தியாவின் செஸ் தற்போது சிறந்த வீரர்களின் கையில் இருப்பதாக கூறியுள்ளார். பெருமைமிக்க இந்த தொடரில் கடைசி எட்டு பேரில் தற்போது நான்கு இந்தியர்கள் விளையாடுகிறார்கள் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருப்பதாக விஸ்வநாதன் ஆனந்த் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, August 16, 2023, 23:53 [IST]
Other articles published on Aug 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+