Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செஸ்- பிரக்ஞானந்தாவை பாராட்டிய உலகின் 2ஆம் நிலை வீரர்.. இறுதிப் போட்டியில் தோற்றாலும் சாதனை

சென்னை: செஸ்ஸப்பல் மாஸ்டர்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வியை தழுவினார்.இருப்பினும் இந்த தொடரில் 2வது இடத்தை அவர் பிடித்தார்.

Chessable Masters – TN Player Praggnandhaa finishes 2nd after lost in final

இறுதிப் போட்டியில் உலகின் 2ஆம் நிலை செஸ் வீரரான 29 வயது சீனாவின் டிங் லிரின் பிரக்ஞானந்தா மோதினார்

நேற்று நள்ளிரவு தொடங்கிய இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, முதல் சுற்றில் அபாரமாக விளையாடி இருக்கிறார்.

இருப்பினும், தனது அனுபவ ஆட்டத்தின் இறுதிப் போட்டியில் முதல் ரவுண்டில் டிங் லிரின் சமன் செய்தார். இந்த நிலையில், அதிவேகமாக காய்க்ளை நகர்த்தும் ரவுண்டில் சீன வீரருக்கு பிரக்ஞானந்தா கடும் சவால் அளித்துள்ளார். அதன் பின்னர், பிரக்ஞானந்தாவை சமாளித்து அவரும் பதிலடி தந்தார்.

இருப்பினும், பிரக்ஞானந்தா கடுமையாக போரடி, தோல்வியை தழுவினார். இதன் மூலம் சீன வீரர் டிங் லிரின் முதலிடத்திலும், பிரக்ஞானந்தா 2வது இடத்தையும் பிடித்தனர். பிரக்ஞானந்தாவின் ஆட்டத்தை பார்த்து பிரமித்து போன உலகின் 2ஆம் நிலை வீரரான லிங் டிரைன், பிரக்ஞானந்தாவின் ஆட்டத்தை பார்த்து வாயடைத்து போய் விட்டேன். பாராட்ட வார்த்தையே இல்லை என்று கூறினார்.

பிரக்ஞானந்தாவின் ஆட்டம் குறித்து பேசிய தந்தை ரமேஷ் பாபு, இரவில் சர்வதேச செஸ் போட்டி, பகலில் பள்ளி படிப்பு என பிரக்ஞானந்தா இரண்டிலும் சிறப்பாக செயல்படுவதாக கூறினார். கார்ல்சனை வீழ்த்திய போது கூட, எவ்வித கொண்டாட்டமும் இன்றி, பிரக்ஞானந்தா தூங்க போய்விட்டதாக தந்தை ரமேஷ் பாபு கூறினார்,

Story first published: Friday, May 27, 2022, 12:39 [IST]
Other articles published on May 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+