For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீன செஸ் விளையாட்டு வீரர்கள் 3 பேருக்கு வாழ்நாள் தடை.. 41 வீரர்களுக்கு அபராதம்.. என்ன நடந்தது?

பீஜிங்: சீனாவில் பிரபலமான சதுரங்க விளையாட்டான சியாங்சியில் பெரும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. சீன சதுரங்க (சியாங்சி) சங்கம், 41 வீரர்களுக்கு மேட்ச் ஃபிக்ஸிங் மற்றும் போட்டிகளில் ஏமாற்று வேலையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதில் மூன்று முக்கிய வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வீரர்கள் போட்டியின் முடிவுகளை தங்கள் விருப்பப்படி மாற்ற முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. சாவோ, வாங், ஜெங் மற்றும் 34 பேர் பணம் பரிமாற்றம் மூலம் போட்டிகளை நிர்ணயித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் சீன சதுரங்க உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chinese Chess scandal rocks China as 41 players penalised and 3 banned for life

சீன செஸ் எனப்படும் சியாங்சி 9 x 11 என்ற சதுரங்க பலகையில் விளையாடப்படும் சதுரங்க விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டில் மேட்ச் பிக்ஸிங் சர்ச்சை எழுவது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதே போன்ற முறையில் பல முன்னணி வீரர்கள் தடை செய்யப்பட்டனர்.

அடிக்கடி சில முன்னணி வீரர்கள் சியாங்சி போட்டியில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருவது வாடிக்கையாக உள்ளது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மோசடி நடவடிக்கைகள் தெரிய வந்தன. இந்த சம்பவம் சீன சதுரங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளது. இந்த விளையாட்டில் நேர்மை மிகவும் முக்கியமானது.

Story first published: Friday, January 17, 2025, 16:59 [IST]
Other articles published on Jan 17, 2025
English summary
Chinese Chess scandal rocks China as 41 players penalised and 3 banned for life
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+