Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னங்க சொல்றீங்க.. ரொனால்டோ ஹோட்டல்களை.. தற்காலிக மருத்துவமனையாக மாற்றலையா?

லிஸ்பன்: போர்ச்சுகல் கால்பந்து ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஹோட்டல்களை தற்காலிக மருத்துவமனையாக மாற்றவில்லை என்று ஹோட்டல் நிர்வாகம் மறுத்துள்ளது.

Recommended Video

கொரோனா பீதி: தனிமை படுத்தப்பட்ட ரொனால்டோ மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் பெர்குசன்

ரொனால்டோவுக்குச் சொந்தமாக லிஸ்பனில் 4 மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளன. அதன் பெயர் சிஆர்7 என்பதாகும். இந்த ஹோட்டல்களை அவர் தற்காலிக மருத்துவமனையாக மாற்றி விட்டார் என்று நேற்று செய்திகள் வெளியாகின. புகழ் பெற்ற டெய்லி மிர்ரர் இணையமும் இதை செய்தியாக வெளியிட்டிருந்தது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை இங்கு வைத்து சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த வசதியை செய்து கொடுத்துள்ளார் ரொனால்டோ என்றும் அந்த செய்தி தெரிவித்திருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக வெறுமனே வாய் வழி பேச்சாக இல்லாமல் அதிரடியாக தனது ஹோட்டல்களையே மருத்துவமனைகளாக ரொனால்டோ மாற்றியிருப்பது ஆச்சரியத்தைக் கொடுத்தது.

மருத்துவமனையாக மாற்றும் திட்டமில்லை

மருத்துவமனையாக மாற்றும் திட்டமில்லை

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து லிஸ்பனில் உள்ள ஒரு ஹோட்டலின் நிர்வாகம் கூறுகையில், இப்போதைக்கு அப்படி எந்தத் திட்டமும் இல்லை. ரொனால்டோ இதுதொடர்பாக எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. எங்களுக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது. இது ஹோட்டல், இது மருத்துவமனை அல்ல. எல்லா நாளையும் போலவே இதுவும் ஒரு நாளாகவே இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

புதிய குழப்பத்தை ஏற்படுத்திய தகவல்

புதிய குழப்பத்தை ஏற்படுத்திய தகவல்

தொடர்ந்து பேசிய நிர்வாகிகள், எங்களுக்கு மீடியாக்களிடமிருந்து தொடர்ந்து போன் வருகிறது. ஆனால் அப்படி எதுவும் இல்லை. அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக கழிய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளனர். அந்த நிர்வாகி ஹோட்டலின் செய்தித் தொடர்பாளர் என கோல்.காம் இணையதளமும் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியால் புதிய குழப்பம் உருவாகியுள்ளது.

மார்கா பத்திரிகையும் செய்தி

மார்கா பத்திரிகையும் செய்தி

முன்னதாக ஸ்பெயினைச் சேர்ந்த மார்கா என்ற பத்திரிகையும், ரொனால்டோ தனது ஹோட்டல்களில் இரண்டை கொரோனா நோய் தடுப்புக்காக தற்காலிக மருத்துவமனையாக மாற்றத் தயாராக இருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தது. போர்ச்சுகல் நாட்டில் இதுவரை 200 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. ரொனால்டோவுக்கே கூட கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகம் வந்து அவரும் கூட தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு இல்லை என்று தெரிய வந்துள்ளது.

தாயாருடன் ஓய்வு

தாயாருடன் ஓய்வு

தற்போது தனது சொந்த ஊரான மடேரியாவில் ரொனால்டோ தனது தாயாருடன் தங்கியுள்ளார். அவரது தாயார் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். அவருடன் ரொனால்டோ தங்கியுள்ளார். தற்போது உலகம் பெரும் சோதனைக் காலத்தில் உள்ளதாகவும், அனைவரும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்து செய்தியும் வெளியிட்டுள்ளார். ரொனால்டோவுக்கு லிஸ்பன் மற்றும் மடேரியா ஆகிய இரு நகரங்களிலும் ஹோட்டல்கள் உள்ளன. சாதாரண ஹோட்டல் முதல் 4 ஸ்டார் ஹோட்டல் வரை இதில் அடக்கமாகும்.

Story first published: Monday, March 16, 2020, 12:54 [IST]
Other articles published on Mar 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+